பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் குறைப்பு!

0
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் குறைப்பு!
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் குறைப்பு!
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் குறைப்பு!

இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.

வட்டி விகிதம்

இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பொதுத்துறை வங்கிகளில் ஜனவரி 1ம் தேதி முதல் பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக பஞ்சாப் நேஷனல் பேங்க் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்தது. இதில் குறிப்பாக அவசர கால கடன் திட்டத்தின் கீழ் 8 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு விடுமுறை, பிற மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!

அதாவது பஞ்சாப் நேஷனல் வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 20 லட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வசதியாக ஓவர் டிராஃப்ட் என்பதும் கிடைக்கிறது. இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி பெறும் வகையில் ஒரு அறிவிப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ளது. இதனை பிப்ரவரி 3ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

1 – 9ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

இந்த அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் 10 லட்சம் ரூபாய் வரை வைத்திருந்தால் அதற்கான வட்டி விகிதம் 2.75% வழங்கப்படுகிறது. அத்துடன் தங்கள் சேமிப்பு கணக்கில் 10 லட்சம் ரூபாய் முதல் 500 கோடி ரூபாய் வரை வைத்திருந்தால் 2.80 சதவீத வட்டியும் வழங்கப்படும் என்றும் சேமிப்பு கணக்கில் 500 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.3.25 சதவீத வட்டியும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இவ்வாறு டொமஸ்டிக் மற்றும் என்.ஆர்.ஐ. முதலீடுகளில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here