அக்டோபர் முதல் OBC & UNI வங்கிகளின் செக் புத்தகங்கள் நிறுத்தம் – PNB அறிவிப்பு!

0
அக்டோபர் முதல் OBC & UNI வங்கிகளின் செக் புத்தகங்கள் நிறுத்தம் - PNB அறிவிப்பு!
அக்டோபர் முதல் OBC & UNI வங்கிகளின் செக் புத்தகங்கள் நிறுத்தம் - PNB அறிவிப்பு!
அக்டோபர் முதல் OBC & UNI வங்கிகளின் செக் புத்தகங்கள் நிறுத்தம் – PNB அறிவிப்பு!

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் காசோலை புத்தகங்கள் அக்டோபர் மாதம் முதல் நிறுத்தப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அறிவித்துள்ளது.

காசோலை புத்தகங்கள்

மத்திய அரசின் அறிவிப்பின் படி கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் சிறிய நிதித்துறை வங்கிகள் பல, பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிறிய வங்கிகளில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு IFSC கோடுகள் உள்ளிட்ட சில முக்கிய வங்கி செயல்பாடுகலும் மாற்றப்பட்டது. அந்த வகையில் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உடன் இணைக்கப்பட்டது.

ஆன்லைனில் வேலை தேடுவோர் கவனத்திற்கு – மோசடி எச்சரிக்கை!

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் செயல்பட்டு வரும், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் பழைய காசோலை புத்தகங்களை பயன்படுத்தமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக PNB வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் வாடிக்கையாளர்களது பழைய காசோலை புத்தகம் அக்டோபர் 1 முதல் நிறுத்தப்படும்.

தயவுசெய்து வாடிக்கையாளர்கள் உங்கள் பழைய காசோலை புத்தகத்தை PNB காசோலை புத்தகத்துடன் புதுப்பிக்கப்பட்ட PNB IFSC மற்றும் MICR உடன் மாற்றவும்’ என அறிவுறுத்தியுள்ளது. அதன் படி OBC and UNI வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PNB கிளையில் இருந்து புதிய காசோலை புத்தகங்களைப் பெற வேண்டும். இதற்காக ATM, PNB One இணைய வங்கி அல்லது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி – இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லையா?

அறிவிக்கப்பட்டபடி, அனைத்து வாடிக்கையாளர்களும் புதுப்பிக்கப்பட்ட காசோலை புத்தகங்களை அக்டோபர் 1 க்குள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் அவற்றை 1800-180-2222 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், பண்டிகை காலங்களில் PNB வங்கி சில்லறை பொருட்கள் மீதான அனைத்து சேவை கட்டணங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வீட்டுக் கடன்களுக்கு 6.80% மற்றும் கார் கடன்களுக்கு 7.15% வட்டி விகிதத்தையும் வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!