செப்டம்பர் இறுதியில் அமெரிக்கா பறக்கும் பிரதமர் மோடி? UN பொதுக்குழு கூட்டம்!

0
செப்டம்பர் இறுதியில் அமெரிக்கா பறக்கும் பிரதமர் மோடி? UN பொதுக்குழு கூட்டம்!
செப்டம்பர் இறுதியில் அமெரிக்கா பறக்கும் பிரதமர் மோடி? UN பொதுக்குழு கூட்டம்!
செப்டம்பர் இறுதியில் அமெரிக்கா பறக்கும் பிரதமர் மோடி? UN பொதுக்குழு கூட்டம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் இருவரும் முதல் முறையாக நேரடியாக சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் சுற்றுப்பயணம்:

இந்தியாவில் நரேந்திர மோடி இரண்டாவது பிரதமராக பதவியேற்ற நாள் முதல் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு வரையில் 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா பெருந்தொற்று பரவி வந்ததால் வெளி நாடுகளுக்கு செல்வதை தவிர்த்தார். கொரோனா தடுப்பு பணியாக அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால் பிரதமர் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தார்.

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல அனுமதி – ஆளுநர் அறிவிப்பு!

பிரதமர் மோடிக்கு 2020 ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது. தற்போது இந்தியாவில் வைரஸ் தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. அதே போல அமெரிக்காவிலும் கொரோனா தொற்று குறைந்துள்ளது. நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அதில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இணைய வங்கி சேவைகள் நிறுத்தம்!

அதற்கான முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது. பிரதமர் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அமெரிக்காவில் புதிய அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் இருவரும் முதல் முறையாக நேரடியாக சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2021ம் ஆண்டில் பிரதமரின் முதல் சுற்றுப் பயணமாக இது அமையும். மேலும் பிரதமரின் அமெரிக்கா சுற்றுப்பயணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!