அமெரிக்க அதிபருடன் பிரதமர் சந்திப்பு – முக்கிய கலந்தாலோசனை!
பல அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க சென்ற இந்திய பிரதமர் அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளார். இருவரையும் பல முக்கிய விஷயங்களை குறித்து கலந்தாலோசித்து உள்ளனர்.
பிரதமர் அமெரிக்க பயணம்:
செப்டம்பர் 25ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் நகரில் நடக்கும் ஐ.நா., பொதுச் சபை கூட்டதில் உலகத் தலைவர்கள் நேரில் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி பொதுச்சபை கூட்டத்தில் உரை ஆற்ற உள்ளார். இதற்காக செப்டம்பர் 22ம் தேதி அன்று இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். மேலும், ‘குவாட்’ மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ‘குவாட்’ அமைப்பை உருவாக்கியுள்ளன.இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில் செப்டம்பர் 24ம் தேதியான நேற்று நடந்தது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,733 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
மேலும், 23ம் தேதி அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும் மோடி சந்தித்து பேசினார். மேலும், ஜோ பைடன் அதிபதிராக பதவியேற்ற பின்னர் இரு தலைவர்களும் முதல் முறையாக சந்திக்கின்றனர். இதனால் மோடிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – புதிய அறிவுரைகள் வெளியீடு!
ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பில், இரு தலைவர்களும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சர்வதேச பிரச்னைகள், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதித்தனர். ‘இந்தியா, அமெரிக்கா உறவில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. இங்குள்ள இந்தியர்கள் அமெரிக்காவை பலப்படுத்தி உள்ளனர். இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளேன். இந்தியாவும், அமெரிக்காவும் பழமையான ஜனநாயக நாடுகளாகும். நம் முன் உள்ள கொரோனா உள்ளிட்ட சவால்களும் ஒரே மாதிரியானவை. அவற்றுக்கு நாம் இணைந்து தீர்வு காண்போம் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
சந்திப்பின் பின் நடந்த குவாட் மாநாட்டில் பன்னாட்டு பிரதமர்களும் கலந்து கொண்டனர். அப்போது, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். மேலும், பிரதமர் மோடியின் பயணத்தில் ஒரு சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அதிகாலை 5 மணிக்கு வாஷிங்டனில் இருந்து நியூயார்க் புறப்படுவதாக இருந்தது. இந்த நேரம் மாற்றப்பட்டு, 2 மணி நேரம் முன்பாக அதிகாலை 3 மணிக்கு அவர் நியூயார்க் புறப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.