பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் 24% ஆக குறைவு – இந்தியா டுடே கருத்து கணிப்பு!

0
பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் 24% ஆக குறைவு - இந்தியா டுடே கருத்து கணிப்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் 24% ஆக குறைவு - இந்தியா டுடே கருத்து கணிப்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் 24% ஆக குறைவு – இந்தியா டுடே கருத்து கணிப்பு!

இந்தியா டுடே நிறுவனம் நடத்தி உள்ள கருத்துக் கணிப்பில் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் 24% ஆக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் புகழ்:

பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவு வந்தது போல் எதிர்ப்பும் கிளம்பியது. பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைவதற்கு எதிராக பல போராட்டங்களும் நடந்தது. பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மக்களுக்கு நடக்கும் அநீதியின் காரணமாக மக்கள் எதிர்த்தனர். மோடி நாட்டின் பிதமராக பொறுப்பேற்ற பின்னர் சர்ச்சைக்குரிய பல திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்தார்.

தமிழக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஆதார் பதிவேற்றம்!

இருப்பினும் அவரது ஆதரவாளர்கள் மோடியின் ஆட்சியை புகழ்ந்து வந்தனர். இந்நிலையில், இந்தியா டுடே நாளிதழ் ஆண்டு தோறும் பல்வேறு தலைப்புகளில் கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது. தற்போது, மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவின் படி பிரதமர் மோடிக்கு ஆதரவாக 24% மக்கள் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் கடந்த ஆண்டு இதே கருத்து கணிப்பில் பிரதமர் மோடிக்கு 66% பேர் ஆதரவு தெரிவித்தனர். நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் போன்ற போன்றவற்றை பிரதமர் கட்டுப்படுத்த தவறியதாகவும், இதனால் வேலையின்மை 23% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கு மொத்தம் 29% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் மேலும், மத்திய அரசு கொரோனா தொற்றினால் நாட்டில் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையை குறைவாக தெரிவிப்பதாக 71% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!