ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு – பிரதமர் மோடி வாழ்த்து!

0
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு - பிரதமர் மோடி வாழ்த்து!
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு - பிரதமர் மோடி வாழ்த்து!
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு – பிரதமர் மோடி வாழ்த்து!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வாழ்த்து:

டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய வீர, வீராங்கனைகள் பதக்கத்தை வென்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். போட்டியின் ஆரம்பிக்கட்டத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பதக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால், நேற்று மகளிருக்கான ஏர் ரைபிள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பதக்க பட்டியலில் முன்னேறி உள்ளது.

‘ஆரம்பிக்கலாமா’ மிரட்டலாக வெளியான பிக் பாஸ் 5 டீஸர் – விக்ரம் லுக்கில் கமல்!

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 1.86 மீ தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இது இவருக்கு இரண்டாவது பதக்கம், ஏற்கனவே ரியோ 2016 இல் தங்கம் வென்றுள்ளார். அடுத்ததாக பீகாரைச் சேர்ந்த சரத்குமார் 1.83 மீட்டரை தாண்டி வெண்கலம் வென்றுள்ளார். இந்த போட்டியில் ரியோ 2016 வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் சாம் கிரேவ் தனது மூன்றாவது முயற்சியில் 1.88 மீ வெற்றிகரமாக தாண்டி தங்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா தற்போது வரை 10 பதக்கங்களை பெற்றுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நாட்டின் பெருமையை உயர்த்திய இந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது டிவீட்டரில் “மாரியப்பன் தங்கவேலு உறுதி மற்றும் சிறப்பு மிக்கவர். வெள்ளி பதக்கம் வென்றதற்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது” என்று அறிவித்துள்ளார். மேலும், சரத்குமாரின் வெற்றிக்கு ” இவற்றின் வெற்றி ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும் புன்னகையைக் கொண்டுவந்துள்ளது. அவரது வாழ்க்கை பயணம் பலரை ஊக்குவிக்கும். அவருக்கு வாழ்த்துக்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!