மத்திய அரசின் ரூ.6000 உதவித்தொகை பெற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!!
இந்தியாவில் மத்திய அரசால் விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ள பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற விரும்புபவர்கள் இந்த செயல் முறையை கட்டாயம் செய்ய வேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
கிசான் திட்டம்:
இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் பிரதம மந்திரியின் கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 2 ஹேக்டெருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் இடு பொருட்களை வாங்க உதவியாக ரூபாய் 2,000 வீதம் 3 கட்டமாக ஒரு ஆண்டுக்கு மொத்தம் ரூபாய் 6,000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் பயன்பெற சில நிபந்தனைகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow our Instagram for more Latest Updates
இதுவரை கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 12 தவணைத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில விவசாயிகள் பணம் வரவு வைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் கிசான் திட்டத்தின் கீழ் தங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
மாவட்டத்தில் 6 நாட்களுக்கு மதுக்கடை மூடல் – ஆட்சியர் அதிரடி உத்தரவு!! இது தான் காரணம்!!
Exams Daily Mobile App Download
தற்போது இணைந்தவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆதார் எண்ணை கிசான் திட்டத்தின் கீழ் இணைக்காத 9 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6000 உதவித்தொகை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதனால் ஆதார் எண்ணை விவசாயிகள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.