PM Kisan Card-ஐ புதுப்பிக்க வேண்டுமா? IOB வங்கியின் புதிய வசதி அறிமுகம்!!

0
PM Kisan Card-ஐ புதுப்பிக்க வேண்டுமா? IOB வங்கியின் புதிய வசதி அறிமுகம்!!
PM Kisan Card-ஐ புதுப்பிக்க வேண்டுமா? IOB வங்கியின் புதிய வசதி அறிமுகம்!!
PM Kisan Card-ஐ புதுப்பிக்க வேண்டுமா? IOB வங்கியின் புதிய வசதி அறிமுகம்!!

மத்திய அரசு வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தால் பல லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் PM Kisan Card -ஐ வங்கி செல்லாமல் வீட்டில் இருந்தவாறு புதுப்பிக்க IOB வங்கி புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

PM Kisan

மத்திய அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக பிஎம் கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.2000 என மொத்தமாக ரூ.6000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 11 தவணை வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 12 தவணை தொகைக்காக பயனாளிகள் காத்து கொண்டிருக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் தங்களிடம் இருக்கும் PM Kisan Card புதுப்பிக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் இந்த PM Kisan Card-ஐ வங்கிகளுக்கு சென்று அலைந்து திரிந்து புதுப்பிக்க வேண்டியது இருக்கும். தற்போது இதனை எளிதாக்கும் விதமாக இந்தியன் வங்கி புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த வங்கியில் ‘வேவ்’ திட்டத்தின் கீழ், பலவித டிஜிட்டல் மாற்றங்கள் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசாக ரூ.1,000 ரொக்கப்பணம் .. அரிசி கார்டுக்கு மாற்ற கோரிக்கை – தமிழக அரசின் திட்டம்!

Exams Daily Mobile App Download

அதன்படி கிசான் கிரெடிட் கார்டை டிஜிட்டல் முறையில் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி தற்போது நீங்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் மூலமாக உங்களின் கிசான் கணக்குகளை புதுப்பிக்கலாம். அத்துடன் இன்டர்நெட் வசதி இல்லாத மொபைல் போன் பயன்படுத்துவோர் மற்றும் குறைந்த இணையதள வேகத்தை உடைய பயனாளிகள் குறுந்தகவல் மூலமாகவும் இந்த வசதியை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!