மத்திய அரசின் PM KISAN 10வது தவணைத்தொகை ரூ.2000 – கிடைக்கவில்லையா? காரணம் இதுதான்!

0
மத்திய அரசின் PM KISAN 10வது தவணைத்தொகை ரூ.2000 - கிடைக்கவில்லையா? காரணம் இதுதான்!
மத்திய அரசின் PM KISAN 10வது தவணைத்தொகை ரூ.2000 - கிடைக்கவில்லையா? காரணம் இதுதான்!
மத்திய அரசின் PM KISAN 10வது தவணைத்தொகை ரூ.2000 – கிடைக்கவில்லையா? காரணம் இதுதான்!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு,10 வது தவணை தொகை கிடைக்கப்பெறாத காரணம் மற்றும் செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிஎம் கிசான் 10 வது தவணைத்தொகை :

இந்தியாவின் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கு கீழ் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த வகையில் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.மேலும் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் 10 வது தவணை ஜனவரி 1, 2022 அன்று விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

TNPSC புதிய அறிவிப்பு – கூட்டுறவுத் துறையில் ரூ.56,100 சம்பளத்தில் வேலை! முழு விபரங்கள் இதோ!

ஆனால் சில விவசாயிகளுக்கு தவணை தொகையானது தாமதமாக கிடைத்தது. மேலும் சிலருக்கு இதுவரை தவணைத் தொகை கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தவணை தொகை பெறாத விவசாயிகள் ஆதார் விவரங்களை தங்களின் பிஎம் கிசான் கணக்குடன் இணைப்படாமல் இருப்பதாகும். எனவே இந்த திட்டத்தின் தவணை தொகை தடையில்லாமல் கிடைக்க ஆதார் விவரங்களை பிஎம் கிசான் கணக்குடன் இணைப்பது கட்டாயம் ஆகும்.விவசாயிகள் பிஎம் கிசான் தவணை நிலை குறித்த தகவல்களை நேரடியாக தங்கள் மொபைலில் பெறலாம்.

1.முதலில் Kisan Yojana – pmkisan.gov.in இன்  அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்

2.விவசாயிகள் கார்னர் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

3.விவசாயிகள் கார்னர் பிரிவில், பயனாளிகள் பட்டியல் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

4.ஆதார் எண், கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட்டு, டேட்டாவைப் பெறு என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

5.பிஎம் கிசான் பயனாளியின் நிலைத் தகவலுக்கான முன்பக்கத்தில் டேட்டாவைப் பெறு பொத்தான் திறக்கும், மேலும் இங்கே பயனாளி நிலை, PM கிசான் 10 வது தவணை நிலை, உங்கள் கணக்கில் விவரங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!