IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 11வது போட்டிக்கான பிளேயிங் 11 அணி!

0
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 11வது போட்டிக்கான பிளேயிங் 11 அணி!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 11வது போட்டிக்கான பிளேயிங் 11 அணி!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 11வது போட்டிக்கான பிளேயிங் 11 அணி!

ஐபிஎல் 2022 சீசனின் 11வது போட்டியில் தனது 3வது ஆட்டத்தில் களமிறங்க இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பிளேயிங் 11 அணி கணிப்புக்கான வீரர்கள் அவர்களின் புள்ளி விவரம் உள்ளிட்ட தகவல்களை இப்பதிவில் காணலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் முதல் முறையாக, நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனின் தொடக்க இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை IPL போட்டிகளில் அதிகப்படியான வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த நிலவரம் ரசிகர்களை கலவரமாக்கி இருக்கிறது. அதாவது, CSK அணியின் தோல்விக்கு காரணமாக கேப்டன்சி மாற்றம் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்பதை தெளிவாக்கி இருப்பதாக கருத்து கணிப்புகள் எழுந்திருக்கிறது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

அதனால் CSK அணி தங்கள் உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது CSK கடந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் தோல்வியடைந்த அதே மைதானமான பிரபோர்ன் ஸ்டேடியத்தில் அடுத்ததாக பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறார்கள். இப்போது இரண்டு தோல்விகளுக்குப் பிறகு CSK தனது பிளேயிங் 11 அணியை எப்படி உருவாக்கும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆட்டத்தில் CSK அணியின் பிளேயிங் 11ல் மூன்று மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் அணி இன்னும் ஒரு சரியான ஃபார்முக்கு வரவில்லை. இப்போது ஆடம் மில்னே காயத்தில் இருந்து சரியான நேரத்தில் குணமடைந்துவிட்டால் அவர் முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக பதினொன்றில் களமிறங்குவார். CSK பந்துவீச்சு பிரிவில் மஹீஷ் தீக்ஷனா மற்றொரு சிறந்த வாய்ப்பு. மேலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான 19வது ஓவரில் பந்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், ஷிவம் துபே பதினொன்றில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளேயிங் 11 அணி:
  • ருதுராஜ் கெய்க்வாட்
  • மொயின் அலி
  • ராபின் உத்தப்பா
  • அம்பதி ராயுடு
  • ரவீந்திர ஜடேஜா
  • எம்எஸ் தோனி
  • டுவைன் பிரிட்டோரியஸ்
  • சிவம் துபே
  • டுவைன் பிராவோ
  • ஆடம் மில்னே/மகேஷ் தீக்ஷனா
  • துஷார் தேஷ்பாண்டே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

ரவீந்திர ஜடேஜா (C), கிறிஸ் ஜோர்டான், ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, எம்எஸ் தோனி (WK), மகேஷ் தீக்ஷனா, ஹரி நிஷாந்த், டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே, ராஜ்கர் தேஷ்பாண்டே, , என் ஜெகதீசன், சுப்ரான்சு சேனாபதி, பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சௌத்ரி, கேஎம் ஆசிப், சிமர்ஜீத் சிங், பகத் வர்மா

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!