2023ல் ஊழியர் பணிநியமனத்தை அதிகரிக்க திட்டம் – Kovai.Co நிறுவனத்தின் அறிவிப்பு!
தமிழகத்தின் கோவையை சேர்ந்த Kovai.Co என்ற மென்பொருள் நிறுவனம் மற்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முன்னோடியாக பணியாளர் நியமனத்தில் செயல்பட்டு வருகிறது.
ஆட்குறைப்பு நடவடிக்கை:
உலகம் முழுவதும் தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக பல துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஐடி துறை தான். இதனால் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. மேலும், நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்காக புதிய நியமனங்களையும், ஊதிய உயர்வையும் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் நிறுவனமான Kovai.Co நிறுவனர் மிகவும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு அரசின் ரூ.2 லட்சம் உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை!
Exams Daily Mobile App Download
அதாவது Kovai.Co நிறுவனம் இதற்கு முன்னர் மிகவும் கட்டுப்பாடான முறையில், தேவையற்ற செலவுகளை தவிர்த்து விட்டு செயல்பட்டதால் தற்போதைய பொருளாதார மந்த நிலை எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், மற்ற நிறுவனங்கள் போல் ஊழியர் ஆட் குறைப்பு செய்யும் எண்ணம் இல்லை என்றும், மேலும், 2023ம் ஆண்டில் நிறுவனத்தில் கூடுதலாக 40 முதல் 50 பேர் வரை நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், 2025ம் ஆண்டில் நிறுவனத்தின் தற்போதைய வருவாயான $10 மில்லியன் என்பதை $30 மில்லியனாக மாற்ற இலக்கு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.