தனியாரிடம் இருந்து பேருந்துகள் குத்தகைக்கு எடுக்க திட்டம் – மாநில அரசு முடிவு!
கேரள மாநில போக்குவரத்து கழகம், தனியாரிடம் இருந்து சொகுசு பேருந்துகளை வாங்கி பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
தனியார் பேருந்துகள்:
கேரளாவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நேரடியாக செல்ல குறைவான பேருந்துகளே இருக்கிறது. இந்நிலையில் கேரள மாநில போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக பேருந்துகள் வாங்க பணம் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி இருக்கிறது. அதனால் மாநில போக்குவரத்து கழகம், தனியாரிடம் இருந்து பேருந்துகளை குத்தகைக்கு எடுத்து வெளி மாநில போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
உலக கோப்பை 2023: இப்ராஹிம் சத்ரன் அதிரடி சதம்.. ஆஸ்திரேலியாவுக்கு 292 ரன்கள் இலக்கு…!
மாநிலத்தில் வெளி மாநில சேவைக்காக தற்போது வெறும் 300 பேருந்துகள் மட்டுமே இருக்கிறது. அதனால் இன்னும் அதிக பேருந்துகள் தேவைப்படுவதால் தனியாரிடம் இருந்து சொகுசு பேருந்துகளை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இது குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.