11,250 அடி உயரத்திலிருந்து விழுந்த ஐபோன் X – அடுத்து நடந்த சம்பவம்! விமானி பகிர்ந்த தகவல்!

0
11,250 அடி உயரத்திலிருந்து விழுந்த ஐபோன் X - அடுத்து நடந்த சம்பவம்! விமானி பகிர்ந்த தகவல்!
11,250 அடி உயரத்திலிருந்து விழுந்த ஐபோன் X - அடுத்து நடந்த சம்பவம்! விமானி பகிர்ந்த தகவல்!
11,250 அடி உயரத்திலிருந்து விழுந்த ஐபோன் X – அடுத்து நடந்த சம்பவம்! விமானி பகிர்ந்த தகவல்!

ஸ்மார்ட்போன்களில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், அதன் விலைக்கேற்ப உறுதித்தன்மையை கொண்டுள்ளதாக ஒரு சம்பவத்தின் மூலம் பயனர்களுக்கு மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன்

பொதுவாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பலரும் ஆப்பிள் ஐபோனில் என்ன சிறப்பம்சங்கள் உண்டு என கேள்வி கேட்பது உண்டு. இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுவது ஆப்பிள் ஐபோன்களின் விலை தான். அதே நேரத்தில் ஒன் பிளஸ் போன்ற மற்ற வகையான ஸ்மார்ட் போன்களும் கூட ஆப்பிள் ஐபோன்கள் விலைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், ஆப்பிள் ஐபோன்களில் சில முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அதன் பயனர்கள் பெருமிதம் கொள்வது வழக்கம்.

அந்த வகையில் இவ்வகை ஐபோன்களின் தரம் மற்றும் உறுதி தன்மையை உறுதி செய்வது தொடர்பான ஒரு சம்பவம் இங்கு அரங்கேறியுள்ளது. அதாவது விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்த சமயத்தில் விமானி ஒருவர் தனது ஐபோன் X ஐ தவறவிட்டுள்ளார். அந்த போனை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கண்டுபிடித்த அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. என்னவெனில் வானத்தில் இருந்து சுமார் 11,000 அடியில் பூமியை நோக்கி விழுந்த ஐபோன் ஒரு கீறலும் இல்லாமல் அவருக்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

பொதுவாக ஐபோன் X வகை மாடல்கள் முன் மற்றும் பின் பக்கத்தில் கண்ணாடி பேனலுடன் வருகிறது. இதன் மூலம் அந்த விமானியின் ஐபோன் உடைந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் டைமண்ட் ஏவியேட்டர்ஸில் பணிபுரிந்து வரும் டேவிட் என்பவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறி தகவலை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், விமானி டேவிட் தனது டயமண்ட் டிஏ 40 விமானத்தை கொலராடோ ஸ்பிரிங்ஸிலிருந்து அட்லாண்டாவுக்கு எடுத்து சென்றுள்ளார்.

அப்போது தனது வலதுபுறத்தில் ஒரு அழகான மேகக்கூட்டம் தோன்றியதை கண்ட அவர் அதை படமாக எடுக்க முயன்றுள்ளார். அதன் படி விமானத்தின் சிறிய பக்க ஜன்னல்கள் வழியாக மேகங்களின் படத்தைக் கிளிக் செய்ய அவர் தனது ஐபோன் X ஐ எடுத்துள்ளார். அப்போது மிகவும் வலுவான காற்று வீசிய சமயத்தில் ஜன்னல் வழியாக ஐபோன் கீழே விழுந்தது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – ஆவணங்கள் சேகரிப்பு பணிகள் தீவிரம்!

மறுநாள் காலையில் தொலைந்து போன மொபைல் போனை தேடிய அவர், அது கடைசியாக விழுந்த இருப்பிடத்தை கண்டறிந்து அங்கு சென்று பார்க்கையில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. என்னவென்றால் கீழே விழுந்த அவரது போனில் ஒரு கீறல் கூட இல்லை. அந்த வகையில் டேவிட் தனது ஐபோன் X ன் ‘டிஃபென்டர் சீரிஸ்’ கேஸ் மூலம் 11,250 அடியில் இருந்து கீழே விழுந்த போன் பாதுகாப்பாக இருப்பதை பகிர்ந்துள்ளார். மேலும் சார்ஜ் செய்த பிறகு ஐபோன் சரியாக இயங்குகிறது என்றும், கீழே விழுந்த தாக்கத்தால் பேட்டரிக்கு எந்த சேதமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!