SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஃபிஷிங் மோசடி எச்சரிக்கை!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஃபிஷிங் மோசடி எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஃபிஷிங் மோசடி எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஃபிஷிங் மோசடி எச்சரிக்கை!

தற்போது வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் எதிர்கொண்டு வரும் ஃபிஷிங் போன்ற இணையவழி மோசடிகளில் இருந்து, வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் விதத்தில் சில முக்கிய வழிகாட்டுதல்களை SBI வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மோசடி எச்சரிக்கை

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு மோசடி தொடர்புடைய சில எச்சரிக்கைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அந்த வகையில் SBI வங்கி வாடிக்கையாளர்கள், ஒருபோதும் அவர்களது மொபைல் பேங்கிங் சேவையின் கடவுச்சொல், பின் எண், TIN போன்ற தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தவிர இந்த ரகசிய எண்களை வாடிக்கையாளர்கள், வங்கியின் ஊழியர்கள் அல்லது சேவை பணியாளர்களுக்கு கூட கண்டிப்பாக தெரிவிக்க கூடாது என குறிப்பிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறையில் 2,400 செவிலியர் & 2,448 ஆய்வாளர்கள் நியமனம் – அமைச்சர் அறிவிப்பு!

அதே நேரத்தில், நீங்கள் வங்கியிலிருந்து ஒரு பரிசை வென்றிருக்கிறீர்கள் என்று கூறும் செய்திகளில் உண்மை இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நீங்கள் சேமித்து வைத்த மொத்த பணத்தையும் இழக்க நேரிடும் என SBI வங்கி ஃபிஷிங் தாக்குதல் குறித்து வாடிக்கையாளர்களுக்கு நினைப்பூட்டுகிறது. இது தொடர்பாக SBI வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்கள் இன்பாக்ஸில் இதுபோன்ற இணைப்புகளை பெறுகிறீர்கள் என்றால், அவற்றைக் கிளிக் செய்யாதீர்கள்.

இதுபோன்ற ஃபிஷிங் இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும். அதனால் கவனமாக இருங்கள். அதனை கிளிக் செய்வதற்கு முன் சிந்தியுங்கள்’ என குறிப்பிட்டுள்ளது. மேலும் அறியப்படாத மின்னஞ்சல் மூலம் வரும் எந்த இணைப்பையும் கிளிக் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர ஃபிஷிங் போன்ற இணையவழி தாக்குதல்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிட்டுள்ளது. அதன் கீழ்,

  • முதலில் இணைய வங்கி பயனர், முறையான இணைய முகவரியிலிருந்து ஒரு மோசடி மின்னஞ்சலை பெறுகிறார்.
  • மின்னஞ்சலில் வழங்கப்பட்ட ஹைப்பர்லிங்கை கிளிக் செய்ய பயனர் தூண்டப்படுகிறார்கள்.
  • இப்போது ஹைப்பர்லிங்கை கிளிக் செய்ததும், உண்மையான இணைய வங்கித்தளத்தை போலவே அந்த போலி இணையதளம் செயல்படும்.

TN Job “FB  Group” Join Now

  • தொடர்ந்து லாகின், சுயவிவரம், பரிவர்த்தனை கடவுச்சொற்கள், வங்கி கணக்கு எண்கள் போன்ற ரகசிய தகவலை வழங்குமாறு கேட்கப்படும்.
  • விவரங்களை வழங்கிய பயனர்கள், Submit பொத்தானை கிளிக் செய்ய, ஒரு பிழை பக்கம் தோன்றும்.
  • இதன் மூலம் பயனர் ஃபிஷிங் மோசடியில் பாதிக்கப்பட்டது தெரிய வரும்.
  • அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை நினைவில் கொண்டு, ஃபிஷிங் மோசடிகளால் பாதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என SBI அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!