உதவி பேராசிரியர் பணிக்கு 2023 வரை PhD கட்டாயம் இல்லை – யுஜிசி அதிரடி!

0
உதவி பேராசிரியர் பணிக்கு 2023 வரை PhD கட்டாயம் இல்லை - யுஜிசி அதிரடி!
உதவி பேராசிரியர் பணிக்கு 2023 வரை PhD கட்டாயம் இல்லை - யுஜிசி அதிரடி!
உதவி பேராசிரியர் பணிக்கு 2023 வரை PhD கட்டாயம் இல்லை – யுஜிசி அதிரடி!

உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயம் என்பதில் விலக்கு அளித்து பல்கலைக்கழக மானியக்குழு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் இப்பணிக்காக காத்து கொண்டிருப்போர் மகிச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

உதவி பேராசிரியர் பணி:

நாடு முழுவதும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 2008 வரை மத்திய மற்றும் மாநில அளவில் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வந்தது. அதாவது முதுநிலை பட்டம் பெற்றவர்கள் நெட் (NET- National Eligibility Test) என்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வு மற்றும் செட் (SET- State Eligibility Test) என்ற மாநில அளவிலான தகுதித் தேர்வு போன்றவைகளில் ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருந்தது. பின்னர் வழிகாட்டுதல் 2009 மற்றும் வழிகாட்டுதல் 2016 ஆகியவற்றின் அடிப்படையில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி அதாவது, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு இத்தகைய நெட் மற்றும் செட் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்தது யுஜிசி அறிவித்தது. மேலும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் பணியில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், 7 ஆராய்ச்சி தாள்கள் வெளியிட்டிருக்க வேண்டும் என்பதை தகுதியாக யுஜிசி நிர்ணயித்தது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – வலுக்கும் கோரிக்கை!

அதனை தொடந்து பேராசிரியர் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் பணியில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 10 ஆராய்ச்சி தாள்கள் வெளியிட்டிருக்க வேண்டும் என்பதை பேராசிரியர் பதவிக்கு தகுதியாக யுஜிசி நிர்ணயித்தது. அதோடு மட்டுமல்லாமல் கல்லூரி முதல்வர் பதவிக்கு பிஎச்டி பட்டம் பெற்றிருப்பதோட மட்டுமல்லாமல் ஆசிரியர் பணியில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சி தாள்களில் 120 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதை கல்லூரி முதல்வர் பதவிக்கு தகுதியாக யுஜிசி நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டுவந்த ஒழுங்குமுறை திருத்தத்தின்படி உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி பட்டம் 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின், அனைத்து யுஜிசி துணை வேந்தர்களுக்கும் கடிதம் அனுப்பினார்.

தமிழகத்தில் 9 – 12ம் வகுப்புகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – பட்டதாரி ஆசிரியர் கழகம்!

பின்னர் கடந்த நாட்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க 2023 வரை (Ph.D) முனைவர் பட்டம் கட்டாயம் இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய அறிவிப்பு உதவி பேராசிரியர் பணியை வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்போரின் கனவை நிறைவேற்றும் விதமாக அமைந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here