PGCIL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,17,500/- சம்பளம்..!

0
PGCIL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.1,17,500/- சம்பளம்..!
PGCIL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.1,17,500/- சம்பளம்..!
PGCIL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,17,500/- சம்பளம்..!

21.03.2022 அன்று Power Grid Corporation of India (PGCIL) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட போவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Diploma Trainee (Civil/ Electrical) பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 20.4.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணி பற்றிய முழு விவரங்களும் கீழே எளிமையாக தரப்பட்டுள்ளது.

PGCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Power Grid Corporation of India (PGCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Diploma Trainee (Electrical) Ladakh பணிக்கு 9 பணியிடங்கள், Diploma Trainee (Civil) Ladakh பணிக்கு 2 பணியிடங்கள், Diploma Trainee (Electrical) Kashmir பணிக்கு 5 பணியிடங்கள் என மொத்தமாக 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 3 வருடம் Diploma படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

  • Discipline: Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical) OR Civil Engineering
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 20.4.2022 அன்றைய நாளின் படி UR/EWS பிரிவினராக இருந்தால் 27 வயது எனவும், SC/ST பிரிவினராக இருந்தால் 32 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.25,000/- முதல் ரூ.1,17,500/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் Computer Based Test மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
  • SC / ST / PwD / Ex-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
PGCIL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (20.04.2022) இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGCIL Notification Link

PGCIL Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!