PG TRB ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 2ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம்:
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு நடப்பு ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளன. மேலும் மாணவர்களுக்கு கொரோனா இடைவெளியால் ஏற்பட்ட கற்றல் குறைவை சரி செய்யும் விதமாக பல புதிய கல்வி முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் எளிதில் பாடங்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தமிழக அரசு தற்காலிக பணி நியமன அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 12 முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட்டது. மேலும், இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக சீரமைப்பு – முக்கிய முடிவு வெளியீடு!
அதாவது முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வருகிற 2ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பு கடிதம் 48 மணி நேரத்திற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்களின் அனைத்து சான்றிதழ்களுடன் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பின் போது போன், கைப்பை உள்ளிட்டவைகளுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள http://trb.tn.nic.in என்ற இணையத்தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்