PG TRB தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
PG TRB தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
PG TRB தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
PG TRB தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குரிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு PSTM

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் 30ம் தேதி வரை முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு 16 கட்டமாக நடத்தப்பட்டது. இத்தேர்வை 2 லட்சத்து 13 ஆயிரத்து 859 பேர் எழுதினார்கள். இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இத்தேர்வில் விண்ணப்பித்த தமிழ்வழி சான்றுதலுக்கு மாற்றாக புதிய விதிமுறைகளின்படி தமிழ்வழி சான்றிதழ் பெற வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இச்சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி தற்போது PSTM சான்றிதழ் அடிப்படையில் தமிழ்‌, ஆங்கிலம்‌, கணிதம், இயற்பியல்‌, வேதியியல்‌, தாவரவியல்‌, விலங்கியல்‌, வணிகவியல், பொருளியல்‌, வரலாறு, புவியியல், அரசியல்‌ அறிவியல்‌, மனை அறிவியல்‌, உயிரி வேதியியல்‌, இந்திய கலாச்சாரம், உடற்கல்வி, கணினி அறிவியல் உள்ளிட்ட 17 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதச்சாரத்தின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் Jio நிறுவனத்தின் 5G அப்டேட் இன்று வெளியீடு? முக்கிய தகவல் இதோ!

இதற்கான அழைப்பு கடிதத்தை www.trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அழைப்பு கடிதத்தை தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்கள் தங்களின் அனைத்து சான்றிதழ் மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை Self attested copies மற்றும் ஆளறிய சான்றிதழ் ஆகியவற்றுடன் வருக புரிய வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் குறித்த நேரத்திற்கு வர தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!