தமிழகத்தில் முதுகலை (PG) ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – பள்ளிக்கல்வி இயக்குனர்!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பள்ளிக்கல்வி இயங்குனர் அவர்களின் செயல்முறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பணி நியமனம்
ஒவ்வொரு புதிய கல்வியாண்டின் துவக்கத்திலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி அரசு மேல்நிலை பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான செயல்பாடுகள் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்கான புதிய முதுகலை ஆசிரியர்கள் பணியமர்த்தல் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக பள்ளிகள் சார்ந்த விவரங்களை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.500 அதிகரிப்பு – அடுத்த மாதம் முதல் வழங்கல்!
ஒவ்வொரு மாவட்டத்தின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு, அரசு மாதிரி பள்ளிகள் மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பு வாரியாகவும், தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும் பதிவேற்ற வேண்டும். மேலும் ஒவ்வொரு பள்ளிகளிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 ஆகிய பணியிடங்களின் பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின் அடிப்படையில் விவரங்களை பதிவு செய்திருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
மேலும் இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் இன்றி உபரி என கண்டறியப்பட்டு இயக்குனரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால், பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் சரண் செய்யப்பட்ட பணியிடங்களை நீக்கம் செய்வதுடன் அப்பணியிடங்களை பதிவேற்றம் செய்யக்கூடாது. இந்த ஆசிரியர்களின் விவரங்களை, எந்தவொரு பெயரும் விடுபடாமல் EMIS இணையதளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.