PF தொகை ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

3
PF தொகை ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
PF தொகை ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
PF தொகை ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

பணியாளர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதியை (EPFO) எளிதாக ஆன்லைன் முறையில் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

வருங்கால வைப்பு நிதி:

மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களிடம் பணியில் உள்ள பணியாளர்களின் ஊதியத்தில்இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை வருங்கால வைப்பு நிதி என்ற திட்டத்தில் சேர்த்து விடுவார்கள். இந்த தொகையினை ஊழியர்கள் தாங்கள் பணியில் இருந்து விலகும் பொழுது அல்லது தங்களுக்கு தேவையான சமயங்களில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – மேலாண் இயக்குனர் அறிவிப்பு!!

கொரோனா நெருக்கடி:

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. மேலும், பலர் தங்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற முடியாத சூழலில் உள்ளனர். இது போன்ற அவசர தேவைகளின் போது தங்களின் PF தொகையினை ஆன்லைன் முறையில் எடுத்துக் கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஆன்லைன் வழிமுறைகள்:

அரசின் சலுகையில் படி, ஊழியர்கள் தங்களின் PF தொகையில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் மற்றும் சலுகைகளுக்கு சமமான தொகையினை எடுத்துக் கொள்ளலாம்.

  • https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற அதிகாரபூர்வ தளத்தில் சென்று online services என்ற பிரிவில் claim என்பதன் கீழ் verify என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்போது அந்த பக்கத்தில் தங்களின் PF கணக்கின் கடைசி நான்கு இலக்க எங்களை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், “proceed for online claim” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்போது வரும் பக்கத்தில் பணத்தை பெறுவதற்கான விருப்பத்தினை தேர்வு செய்ய வேண்டும்.
  • PF advance படிவம் தோன்றும் அதில், I want to apply for என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர், outbreak of pandemic (Covid-19) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • Get Aadhaar OTP என்பதை தேர்வு செய்து தங்களின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • இதன் பின்னர் உங்களின் பணம் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பணம் வங்கி கணக்குக்கு வர 10 நாட்கள் ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. PF தொகை பெறுவதற்கு.. வங்கி கணக்கை எப்படி இணைப்பது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!