EPF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் PF மாற்றம்! முழு விவரங்கள் இதோ!

0
EPF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் PF மாற்றம்! முழு விவரங்கள் இதோ!
EPF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் PF மாற்றம்! முழு விவரங்கள் இதோ!
EPF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் PF மாற்றம்! முழு விவரங்கள் இதோ!

அனைத்து EPF உறுப்பினர்களும் தங்களது தனிப்பட்ட PF கணக்குகளை, உலகளாவிய கணக்கு எண்ணின் (UAN) கீழ் இணைக்க வேண்டும் என்று EPFO அமைப்பு அறிவுறுத்தி வருகிறது. இதற்கான சில எளிய ஆன்லைன் வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

UAN இணைப்பு

ஒவ்வொரு மாத சம்பளம் பெறும் ஊழியர்களும் வருங்கால வைப்பு நிதி (PF) அமைப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அதே போல ஊழியர்களின் நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை தங்களது ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கும். இந்த தொகையை ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும் போது பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்போது PF கணக்கு வைத்திருக்கும் ஒரு ஊழியர், அலுவலகம் அல்லது நிறுவனத்தை மாற்றும்போது EPF பரிமாற்றம் என்பது அவசியமாகிறது.

Post Office பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – தினசரி ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ்!

அந்த வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இப்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளை ஆன்லைனில் மாற்றலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து PF கணக்குகளையும் ஒரே உலகளாவிய கணக்கு எண்ணின் (UAN) கீழ் இணைப்பது அவசியம் என்பதை பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது EPFO ஆல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது EPF பரிமாற்றத்தை ஆன்லைனில் மேற்கொள்ள கீழ் காணும் படிகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

  • இதில் முதலாவதாக https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • UAN மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைய வேண்டும்.
  • பிறகு ஆன்லைன் சேவைகள் என்ற ஆப்ஷனுக்கு சென்று, ‘ஒரு உறுப்பினர் – ஒரு EPF கணக்கு (பரிமாற்றக் கோரிக்கை)’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அங்கு தற்போதைய வேலைக்கான ‘தனிப்பட்ட தகவல்’ மற்றும் ‘PF கணக்கு’ ஆகியவற்றை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
  • தொடர்ந்து ‘விவரங்களை பெறு’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • இப்போது முந்தைய வேலையின் PF கணக்கு விவரங்கள் தோன்றும்.
  • சான்றளிக்கும் படிவத்திற்கு உங்கள் முந்தைய நிறுவனம் அல்லது தற்போதைய நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • UAN பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ‘OTP பெறுக’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது ‘OTP’ ஐ உள்ளிட்டு ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • குறிப்பிடத்தக்க வகையில், EPFO அதன் உறுப்பினர்களின் ஆதார், பான், UAN, வங்கி கணக்கு அல்லது OTP போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும்படி ஒருபோதும் கேட்பதில்லை. இதற்கிடையில் EPFO ஆனது 9.11 லட்சம் புதிய உறுப்பினர்களுடன் டிசம்பர் 2021ல் 14.60 லட்சம் நிகர சந்தாதாரர்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!