GSTக்குள் பெட்ரோல் வந்தால் ஒரு லிட்டர் ரூ.75 ஆக குறையும் – 77% பேர் ஆதரவு!

0
GSTக்குள் கீழ் பெட்ரோல் வந்தால் ஒரு லிட்டர் ரூ.75 ஆக குறையும் - 77% பேர் ஆதரவு!
GSTக்குள் கீழ் பெட்ரோல் வந்தால் ஒரு லிட்டர் ரூ.75 ஆக குறையும் - 77% பேர் ஆதரவு!
GSTக்குள் பெட்ரோல் வந்தால் ஒரு லிட்டர் ரூ.75 ஆக குறையும் – 77% பேர் ஆதரவு!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை GST வரிக்குள் வந்தால் லிட்டருக்கு ரூ.75 வரை குறைய வாய்ப்புள்ளதாக எழுப்பப்பட்ட கருத்துக்கு 77% பேர் தங்களது ஆதரவுகளை தெரிவித்துள்ளதாக ஆன்லைன் சர்வே ஒன்று தகவல் அளித்துள்ளது.

பெட்ரோல் விலை

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது வெகு நாட்களாக மக்கள் சந்தித்து வரும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒரு லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வரும் எரிபொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் இது தொடர்புடைய நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வாகன ஓட்டிகளுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் உயரும் கொரோனா புதிய பாதிப்புகள் – மீண்டும் ஊரடங்கு அமல்?

இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை GST யின் கீழ் வரும் பட்சத்தில் அதன் விலை குறைவை காணும் என ஒரு ஆன்லைன் சர்வே தகவல் அளித்துள்ளது. தற்போது வரை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை மத்திய மற்றும் மாநில அரசின் வரி வரம்புக்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அவை GST என்ற ஒரே வரி வரம்புக்குள் வந்தால் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் GST மூலம் 28% வரி விதிக்கப்பட்டாலும் லிட்டருக்கு ரூ.75 வரை பெட்ரோல், டீசல் விலை குறையும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து – கடைசி நிமிட முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த GST வரி தொடர்புடைய நடைமுறைக்கு சுமார் 77% பேர் ஆதரவு அளித்துள்ளதாக ஆன்லைன் சர்வே தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 379 மாவட்டங்களில் சுமார் 7,500 பேரிடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்புடைய சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இதில் 11% பேர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை GST க்குள் கொண்டு வரக்கூடாது எனவும், 12% பேர் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் ஆய்வு முடிவுகள் கூறியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!