தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – பட்ஜெட்டில் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு - பட்ஜெட்டில் அறிவிப்பு!
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு - பட்ஜெட்டில் அறிவிப்பு!
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – பட்ஜெட்டில் அறிவிப்பு!

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைப்பதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட் உரையில் அறிவித்து உள்ளார்.

பெட்ரோல் மீதான வரி குறைப்பு:

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 3 மணிநேரம் தொடர்ச்சியாக உரை நிகழ்த்தி உள்ளார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு எவ்வளவு? என்பது குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

TN Budget 2021 Live Updates – தமிழக அரசின் இ-பட்ஜெட் தாக்கல்!

மேலும் தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்படும் என கூறியது நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.225.62 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை குறித்த மக்களின் அச்சம் இனி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு வரியை குறைத்து உள்ளதால் அரசுக்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!