இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா? பீட்டர்சன் பரிந்துரை! ரசிகர்கள் விமர்சனம்!

0
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா? பீட்டர்சன் பரிந்துரை! ரசிகர்கள் விமர்சனம்!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா? பீட்டர்சன் பரிந்துரை! ரசிகர்கள் விமர்சனம்!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா? பீட்டர்சன் பரிந்துரை! ரசிகர்கள் விமர்சனம்!

ஜனவரி 15 ஆம் தேதி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்தார். அதை தொடர்ந்து அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ரோஹித் சர்மாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

பீட்டர்சன் பரிந்துரை:

விராட் கோஹ்லி சர்வதேச ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதை தொடர்ந்து கடந்த ஜனவரி 15 ஆம் தேதி டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளின் அடுத்த கேப்டனுக்கான பட்டியலில் பல்வேறு வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இது குறித்து BCCI ஆலோசனை கூட்டம் மேற்கொள்ள உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்து அடுத்த டெஸ்ட் அணி கேப்டன் நியமிக்கப்படும் என்று BCCI தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு Post Office வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஓவர் T20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகினார். இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் சர்வதேச ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கோஹ்லி விலகிய நிலையில் அடுத்த டெஸ்ட் கேப்டனாக ரோஹித் ஷர்மாவையே நியமிக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ரோஹித் பேட்டியளித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2022 – மாணவர் சேர்க்கை உயர்வு!

இது குறித்து பீட்டர்சன் கூறுகையில், ரோஹித் சர்மாவின் கேப்டன் திறமையை நான் IPL தொடரில் கண்டறிந்தேன் என்றும் இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது என்றும் கூறினார். மேலும் கடந்த ஆண்டு இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சமீபத்தில் நடந்த நியூசிலாந்து எதிரான போட்டிகளில் இந்திய அணி தொடரை வென்றது. இத்தொடரில் ரோஹித் சர்மாவின் கேப்டன் திறமை அனைத்து தரப்பிலும் பாராட்டப்பட்டது. எனவே அடுத்த இந்திய அணி டெஸ்ட் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here