தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை – உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு!

0
தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை - உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு!
தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை - உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு!
தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை – உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு!

தீபாவளி பண்டிகையை ஒட்டி தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கு உரிமம் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

தமிழகத்தில் மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தும் விழாவை கொண்டாடுவது வழக்கம். பட்டாசுகள் இல்லாத தீபாவளி திருநாளை நினைத்து பார்ப்பது சற்று கடினமான ஒன்று. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் வைக்க கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

1 – 8 ம் வகுப்புகளுக்கு நவ.8 முதல் பள்ளிகள் திறப்பு? கல்வித்துறை ஆலோசனை!

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் 15 ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் வைக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்கள் வரும் 27ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பத்தோடு, படிவம் 5 இல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் பிரதிகள் – 5, கடையின் வரைபடம், மனுதாரரின் மார்பளவு வண்ண புகைப்படங்கள் – 2, மனுதாரா் உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி ரசீது செலுத்திய நகல், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில், இடத்தின் பத்திர நகல் மற்றும் வீட்டு வரி செலுத்திய ரசீது நகலுடன் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20க்கான முத்திரை தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் – அரசு ஆலோசனை!

மேலும் அதனுடன் உரிய கணக்கு தலைப்பின் கீழ் அரசு கணக்கில் பாரத ஸ்டேட் வங்கியில் உரிமக் கட்டணம் செலுத்தியதற்கான அசல் ரசீது முதலியவற்றையும் இணைத்து ஆன்லைன் மூலம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!