தமிழகத்தில் முழுவீச்சில் பேருந்துகள் இயங்க அனுமதி? பழுது நீக்கும் பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் பழுது நீக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளின் நிலை குறித்து, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆய்வு:
தமிழகத்தில் மக்களின் ஒத்துழைப்பாலும், அரசின் நடவடிக்கைகளாலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் கொரோனா பரவல் சூழலை அடிப்படையாக கொண்டு 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28 முதல் தொற்று குறைந்த வகை 1ல் உள்ள 4 மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், மகளிர் விடுதிகள் – சமூக நலத்துறை அறிவிப்பு!
வகை 3 இல் உள்ள மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் திருப்பூர் மண்டலத்தில் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள், காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை மற்றும் பழநி ஆகிய பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 5ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
TN Job “FB
Group” Join Now
எந்த நேரத்திலும் பஸ்களை முழுவீச்சில் இயக்க அரசு அனுமதி அளிக்கலாம் என்பதால் பழுது நீக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் பேருந்துகளின் நிலை குறித்து, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன எனவும், அனைத்து பேருந்துகளையும் பழுது நீக்கி இயக்க ஏதுவாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.