கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி – முதல்வர் உத்தரவு!

0
கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி - முதல்வர் உத்தரவு!
கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி - முதல்வர் உத்தரவு!
கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி – முதல்வர் உத்தரவு!

கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த நபரின் உடலை அவர்கள் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவதற்காக தங்கள் வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என்று கேரள மாநில முதல்வர் பிரனாயி விஜயன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா உயிரிழப்பு:

இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று மக்களை கடுமையாக தாக்கி அதிக அளவிலான உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் கடும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தற்போது ஒருவர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தால் அவரது உடல் குடும்பத்தினரிடம் வழங்கப்பட மாட்டாது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 45,951 பேருக்கு கொரோனா – 817 பேர் உயிரிழப்பு!

அதற்கு மாறாக மருத்துவமனை சார்பில் உயிரிழந்தவரின் உடல் மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு மனிதனின் கடைசி கால கட்டத்தில் அவருக்கு செலுத்தப்படும் இறுதி மரியாதை மற்றும் சடங்கினை செலுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்த நபரின் குடும்பத்தார் பெரும் வேதனைக்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையை மாற்றும் நோக்கில் கேரளா மாநில முதல்வர் பிரனாயி விஜயன் அவர்கள் இது குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்க அனுமதி – அரசிடம் கோரிக்கை!

அதன்படி இனி கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அவரது குடும்பத்தினர் அஞ்சலிக்காக தங்கள் வீட்டிற்கு எடுத்து செல்லலாம் என்று தெரிவித்துள்ளார். இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த 1 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தக்க ஆலோசனை மேற்கொண்ட பின்பே இத்தகைய அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!