Swiggy நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – நிரந்தர சம்பளம், பதவி உயர்வு அறிவிப்பு!

0
Swiggy நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் - நிரந்தர சம்பளம், பதவி உயர்வு அறிவிப்பு!
Swiggy நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் - நிரந்தர சம்பளம், பதவி உயர்வு அறிவிப்பு!
Swiggy நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – நிரந்தர சம்பளம், பதவி உயர்வு அறிவிப்பு!

ஸ்விக்கி டெலிவரி ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை ஸ்விக்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,’Step Ahead’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் தற்போது டெலிவரி வேலையில் உள்ள ஊழியர்கள் மேனேஜர் அளவிலான பொறுப்புகளுக்கு செல்ல முடியும் என ஸ்விக்கி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் ஸ்விக்கியின் நிர்வாக பதவிகளுக்கு வரவும், நிரந்தர சம்பளம் மற்றும் கூடுதல் சலுகைகளை அனுபவிக்கவும் முடியும்.

நிரந்தர சம்பளம், பதவி உயர்வு:

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது உணவு டெலிவரி நிறுவனங்கள். இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் நிறுவனங்கள் இருந்தாலும், முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஸ்விக்கி தான். நகர சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருக்கிறார்கள். சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு வண்ண உடைகளில் உணவு பெட்டிகளை சுமந்து கொண்டு மூச்சு விட முடியாத வாகன நெருக்கடியில் முகத்தை முழுவதும் மூடிக் கொண்டு இரண்டு சக்கர வாகனங்களில் காற்றாய் பறந்து வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட உணவுகளை கொடுக்கிறார்கள். டெலிவரி பாய்ஸ் என்று நுகர்வோரால் அழைக்கப்படும் இவ்வூழியர்களின் ஒரு நாள் உழைப்பு, சக்கரமாக சாலையில் தேய்ந்து ஓய்கிறது.

PM KISAN திட்ட தமிழக பயனாளிகள் கவனத்திற்கு – கடன் அட்டை பெற சிறப்பு முகாம் ஏற்பாடு!

சென்னை உள்ளிட்ட பல நகரங்கள், மாநகரங்களில் மனிதர்களின் வாழ்க்கை முறையிலும், பணி முறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, வீடுகளில் சமைப்பதற்கு பதிலாக உணவகங்களில் ஆன்லைன் முறையில் உணவுகளை வாங்கி உண்ணும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆன்லைன் உணவு டெலிவரி என்ற கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கொரோனா காலகட்டத்திலும் இவர்களின் சேவை தடை படவில்லை. ஸ்விக்கி நிறுவனத்தில் லட்சக்கணக்கான டெலிவரி ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இருப்பினும் ஸ்விக்கி டெலிவரி ஊழியர்களுக்கு நிரந்தர சம்பளம் வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

ExamsDaily Mobile App Download

இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து ஸ்விக்கி நிறுவனம் இன்று புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெலிவரி ஊழியர்கள்தான் எங்கள் முதுகெலும்பு, நாடு முழுவதும் 2.7 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வருமானம் ஏற்படுத்தி தந்ததை எண்ணி பெருமைபடுகிறோம். இந்நிலையில், ஸ்விக்கி Step Ahead என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி புளூ காலர் வேலையை வொய்ட் காலராக மாற்றி நிர்வாக பொறுப்புகளுக்கு வர விரும்பும் ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் நிர்வாக பொறுப்புகளுக்கு வருவதற்கு டெலிவரி ஊழியர்களிடம் டிகிரி, கணினி அறிவு, ஆங்கில மொழி திறன் மற்றும் ஸ்விக்கியில் சில ஆண்டு வேலை அனுபவம் ஆகியவை இருத்தல் வேண்டும் என தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!