தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் – செவி சாய்ப்பாரா முதல்வர்?

0
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் - செவி சாய்ப்பாரா முதல்வர்?
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் - செவி சாய்ப்பாரா முதல்வர்?
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் – செவி சாய்ப்பாரா முதல்வர்?

தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சிக்கு வந்து 1 வருடம் ஆக உள்ளது. பல்வேறு துறைகளில் நலத் திட்டங்களை தமிழக முதல்வர் அமல்படுத்தி வருகிறார். இருப்பினும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பத்தாண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. எனவே பகுதி நேர ஆசிரியா்களை நிரந்தரப்படுத்த 110 விதியின் கீழ் முதல்வா் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம்:

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமாா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டதோடு, கல்வி இணைச் செயல்பாடும் தேவை என்ற அடிப்படையில் கணினி அறிவியல், உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்றவற்றை போதிக்க 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் 2012ஆம் ஆண்டு நியமித்த போது இவர்களுக்கு வழங்கிய 5ஆயிரம் தொகுப்பூதியமானது, 2021ஆம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. மரணம், ஓய்வு என 4 ஆயிரம் பேர் வேலையில் இல்லை. இதனால் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டசபையில் தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய குரல் கொடுத்தது.

TNPSC CESE தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – பொதுப்பணி தேர்வாணையம் வெளியீடு!

திமுகவின் உங்கள் தொகுதி ஸ்டாலின் – விடியல் தர போறாரு ஸ்டாலின் நிகழ்ச்சியிலும் நேருக்கு நேர் பகுதிநேர ஆசிரியர்களிடையே தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பேசிய போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பணி நிரந்தரம் செய்வோம் என எதிர்கட்சி தலைவராக இருந்தபோது உறுதி அளிக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கை சேர்க்கப்பட்டது. இதனால் பட்ஜெட்டில் இந்த கோரிக்கை இடம்பெறும் என பலர் எதிர்பார்த்து வந்தனர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. பல கட்சிகள் சாா்பிலும் முதல்வரிடம் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் திமுக ஆட்சிக்கு வந்து 1 வருட ஆக உள்ள நிலையில் பணி நிரந்தரம் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

TN TET தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!

மேலும் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 37,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய பட்ஜெட்டைவிட ரூ. 4,300 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில்,ரூ. 300 கோடி ஒதுக்கினால் 12,000 ஆசிரியா்களை நிரந்தரம் செய்துவிடலாம் என தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு பட்ஜெட்டிலும் ஆசிரியா் பணி நிரந்தர அறிவிப்பு இடம்பெறவில்லை. மேலும் 11வது ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் பகுதி நேர ஆசிரியராக வேலை பார்த்து வருகிறோம், அதனால் எங்கள் குடும்பம் பொருளாதார ரீதியில் அதிக பாதிப்பை சந்திக்கிறது. எனவே, 110 விதியின் கீழ் எங்களைப் பணி நிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!