மக்களின் பிரச்சனைகள் மாவட்ட அளவிலேயே தீர்க்க வேண்டும் – தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்!

0
மக்களின் பிரச்சனைகள் மாவட்ட அளவிலேயே தீர்க்க வேண்டும் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்!
மக்களின் பிரச்சனைகள் மாவட்ட அளவிலேயே தீர்க்க வேண்டும் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்!
மக்களின் பிரச்சனைகள் மாவட்ட அளவிலேயே தீர்க்க வேண்டும் – தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்!

தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மக்களின் பிரச்சனைகள் மாவட்ட அளவிலேயே தீர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தலைமை செயலாளர்:

சமீப நாட்களாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அதிக அளவிலான மனுக்கள் பெறப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியின் போது மக்களின் குறைகளை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், இந்த பிரச்சனைகள் 100 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிப்பவர்களுக்கு அரசு இலவச வீடு வழங்குவதாகவும் வதந்திகள் எழுந்தது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு வழங்க தலைமை செயலகத்தில் கூடி விடுகின்றனர்.

செப்., 21 ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மக்கள் தங்கள் மனுக்களை நேரில் வழங்க வேண்டாம் என்றும் இணையதள முகவரியில் தெரிவிக்கலாம் என்று அரசு சமீபத்தில் தெரிவித்தது. இருப்பினும் மக்களின் கூட்டம் குறைந்தபாடில்லை. இதனால் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மக்களுடைய பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில் பிரச்னைகளை தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கும் மேலான மனுக்கள் குவிகின்றது.

TN Job “FB  Group” Join Now

மாவட்ட அளவில் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காததால் மட்டுமே மக்கள் முதல்வரின் பிரிவிற்கு மனுக்களை அனுப்புகின்றனர். மக்கள் கவலையுடன் காத்திருப்பதை பார்க்கும் போது மனம் க்கிறது, எனவே விரிவான ஆய்வின் மூலம் மாவட்ட அளவிலான பிரச்னைகளை மாவட்ட அளவிலே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக மனுக்களை தீர்த்து வைக்கும் ஆட்சியர்களை விட, குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்திலிருந்து வருகிறதோ அவர்களுக்கு கேடயம் அளிக்கும் நடைமுறையை கொண்டுவரும் அளவுக்கு உங்கள் பணி இருக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here