தமிழக மின்வாரியம் அதிரடி – இனிமே அலட்சியமாக வேலை நடக்காது??
உயர்மட்ட மின் கேபிள்கள் அறுந்து விழுவதனால் ஏகப்பட்ட உயிர்கள் பலியாகும் நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே உயர்மட்ட பவர் கேபிள்கள் அறுந்து விழுவதனால் விலங்குகள் மற்றும் மனித உயிரிழப்புகளும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே அறுந்து விழுந்த கம்பியின் மூலமாக மின்சாரம் தாக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கான, பராமரிப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) செய்ய வேண்டும் எனவும், மனித உயிரில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – உயர் நீதிமன்றத்தின் முக்கிய கருத்து!
இதன் அடிப்படையில், மின் கேபிள்கள் அறுந்து விழுந்தால் உடனே மின் விநியோக ட்ரான்ஸ்பார்பரை ஊழியர் பரிசோதிக்க வேண்டும் எனவும், புயல், பலத்த காற்றின் போது தான் வயர்கள் அறுந்துபோக வாய்ப்புள்ளதால் மழை காலங்களில் அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் Tangedco சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றி சரியான நேரத்தில் மின் வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஊழியர்கள் அலட்சியம் காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.