விமானத்தின் டயர் மீது அமர்ந்து சென்ற ஆப்கானிஸ்தர்கள் – நடுவானில் கீழே விழுந்து பலி!

0
விமானத்தின் டயர் மீது அமர்ந்து சென்ற ஆப்கானிஸ்தர்கள் - நடுவானில் கீழே விழுந்து பலி!
விமானத்தின் டயர் மீது அமர்ந்து சென்ற ஆப்கானிஸ்தர்கள் - நடுவானில் கீழே விழுந்து பலி!
விமானத்தின் டயர் மீது அமர்ந்து சென்ற ஆப்கானிஸ்தர்கள் – நடுவானில் கீழே விழுந்து பலி!

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலீபான்கள் வசமாக்கப்பட்ட பிற்பாடு உயிர் பிழைக்க அங்கிருந்து தப்பிக்க முயலும் காபூல் நகரத்தை சேர்ந்த மக்கள் அமெரிக்க விமானத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தவாறு வெளியான காணொளி பார்ப்பவர்களின் மனதை நொறுக்குவதாக உள்ளது.

விமான விபத்து

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வந்த 20 ஆண்டு கால போர், காபூல் நகரை தாலீபான்கள் கைப்பற்றியவுடன் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அந்நாட்டில் போர் முடிந்தது என்ற அச்சத்தில் இருந்து மக்கள் வெளி வரும் முன்னதாக ஆப்கானிஸ்தான் தாலீபான்கள் கையில் ஒப்படைக்கப்பட்டதை அறிந்தவுடன் கூடுதல் பயமும், திகிலும் அவர்களை வதைத்து கொண்டுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை தன் வசப்படுத்திய தாலீபான்கள் கடைசியில் அந்நாட்டின் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

Reliance Jio, Airtel நிறுவனங்களின் அதிரடி ரீசார்ஜ் ஆபர் – பயனர்கள் கவனத்திற்கு!

இதை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி, அதிகாரங்களை தாலீபான்களிடம் ஒப்படைத்து நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தாலீபான்கள் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சந்தித்து வரும் இன்னல்களை சில காணொளிகள் படம் பிடித்துள்ளது. அந்த காணொளியில் காபூல் நகரில் உள்ள ஒரு விமான தளத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற முயற்சித்த போது, அதில் 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

அதே நேரத்தில் காபூலில் இருந்து பறக்கும் அமெரிக்க விமானத்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட 3 பேர், நடு வானில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த காணொளி பார்ப்பவர்கள் கண்களை குளமாக்கி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க விமானப்படை விமானத்தை துரத்திக்கொண்டு வந்த மக்கள் கூட்டம் விமான நிலைய ஓடுபாதையில் அலைமோதி கொண்டிருக்கின்றனர். மேலும் இதில் ஒரு கூட்டம் மக்கள் விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானத்தின் சிறகு மீது அமர்ந்திருந்தது திகிலடைய செய்துள்ளது. இதனிடையே மக்களை விரட்டி அடிக்கும் நோக்கத்தோடு அமெரிக்க ராணுவம் துப்பாக்கி சூட்டை நடத்தியதாகவும், அதில் கிட்டத்தட்ட 5 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!