தடுப்பூசி செலுத்தினால் தங்க நாணயம், இருசக்கர வாகனம் இலவசம் – அசத்தும் சமூக ஆர்வலர்கள்!!

1
தடுப்பூசி செலுத்தினால் தங்க நாணயம், இருசக்கர வாகனம் இலவசம் - அசத்தும் சமூக ஆர்வலர்கள்!!
தடுப்பூசி செலுத்தினால் தங்க நாணயம், இருசக்கர வாகனம் இலவசம் - அசத்தும் சமூக ஆர்வலர்கள்!!
தடுப்பூசி செலுத்தினால் தங்க நாணயம், இருசக்கர வாகனம் இலவசம் – அசத்தும் சமூக ஆர்வலர்கள்!!

பொது மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு தங்க நாணயம், இரு சக்கர வாகனங்கள் என பல பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி குறித்த சரியான விழிப்புணர்வு இன்னும் மக்கள் மத்தியில் உண்டாகவில்லை. நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருந்த போதிலும் தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கையானது இன்று வரை குறைவாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவளம் பகுதியை சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் கையாண்டுள்ள முயற்சிகள், தடுப்பூசி செலுத்துவதில் நல்ல பலனை உண்டாக்கியுள்ளது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பதிவு செய்தோர் கவனத்திற்கு – அரசு உத்தரவு!

அதாவது தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், கோவளம் பகுதியில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு தங்க நாணயம், குளிர்சாதன பெட்டி முதல் இருசக்கர வாகனங்கள் வரை பல பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. கோவளத்தை சேர்ந்த இளைஞர்கள் STS என்ற அறக்கட்டளை மூலம் இத்தகைய சேவைகளை செய்து வருகின்றனர். தடுப்பூசி போட மக்களிடையே பெரும் பயம் இருப்பதை கண்டறிந்த இவர்கள் சி.என்.ராம்தாஸ் சாம்பியன்ஸ் டெவலப்மென்ட் டிரஸ்ட் மற்றும் டான் பாஸ்கோ முன்னாள் மாணவர்கள் குழுவுடன் இணைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

ssc

இத்தகைய அறிவிப்பின்படி அந்த பகுதி மக்கள் பலர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முன்வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை (மே 29) துவங்கிய இந்த நடவடிக்கை மூலம், கோவளம் பகுதியில் ஒரு நாளைக்கு 50 பேர் வீதம் தடுப்பூசி செலுத்தினார்கள். தற்போது தினசரி 100 பேர் வீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருகிறார்கள். இத்தகைய சேவைகளை துவங்குவதற்கு முன்பு, தொலைக்காட்சி நடிகர் மூலம் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்துக்காக STS அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர்கள் 50 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. i am a brain stroke and paralysis patient left leg and hand affected i need a three wheeler scooter please help me

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!