தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி – குவியும் சுற்றுலா பயணிகள்!
தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் கொரோனா கால ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொடைக்கானலில் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சுற்றுலா பயணிகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் தாக்கத்தின் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழக அரசு பல்வேறு நோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தியது. மாநிலம் முழுவதும் பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அவசர பயணங்களுக்கு மக்கள் இ- பாஸ் அல்லது இ- பதிவு செய்து பயணிக்கலாம் என்று அறிவுறுத்தியது. தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது.
தமிழகத்தில் கல்லூரி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் – நீதிமன்றம் உத்தரவு!!
தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை அளித்து வருகிறது. நேற்று ஜூலை 5ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதாகவும், பொதுமக்கள் இ- பாஸ் மற்றும் இ – பதிவு போன்றவை இல்லாமல் பயணிக்கலாம் என்றும் அரசு அறிவித்தது. இதனால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
அங்குள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, வெள்ளி நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பிரையண்ட் பூங்காவிற்கு நேற்று வந்த பயணிகளுக்கு தோட்டக்கலைத் துறையினர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், படகு சவாரி மற்றும் பிற சுற்றுலா தலங்களையும் திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.