வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க நவ.30 கடைசி நாள் – ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு!!
பென்ஷன் வாங்கி வரும் ஓய்வூதியதாரர்கள் நவ.30 ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் சான்றிதழ்:
பென்ஷன் தொகை பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு சான்றாக கட்டாயமாக ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் நவ.30 ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
JOB ALERT..! வேலைவாய்ப்பை தேடும் நபர்கள் கவனத்திற்கு – நவ.17 & 18 நேர்காணல்!
முதலாவதாக, ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜீவன் பிரமான் போர்ட்டலுக்குச் சென்று கைரேகையை பதிவு செய்து வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இது மட்டுமல்லாமல், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி இணையதள பக்கத்தின் மூலமாகவும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக மட்டுமல்லாமல் பொதுச் சேவை மையம், வங்கிக் கிளைகள் அல்லது அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.