அரசு ஊழியர்கள் வைக்கும் அகவிலைப்படி கோரிக்கை – இன்று ஆலோசனை!
தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்:
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 2023 ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் மருத்துவ படிக்கான தொகையை ரூ.300 ஆக உயர்த்த வேண்டும் எனவும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 50,000 ஆக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
டிச. 4 முதல் ஜன.20 வரை வங்கி ஊழியர்கள் தொடர் போராட்டம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!
இக்கோரிக்கைகளை தற்போது அரசுக்கு தெரிவிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. இது தொடர்பாக பேசிய CIDU, AITUC சங்க நிர்வாகிகள், தற்போது போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளது. இதற்கு மத்தியில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கையில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினர்.