தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை – கோரிக்கை போராட்டம்!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை - கோரிக்கை போராட்டம்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை - கோரிக்கை போராட்டம்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை – கோரிக்கை போராட்டம்!

தமிழக அரசின் போக்குவரத்துக்கு துறையில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கடந்த 76 மாதங்களாக செலுத்தப்படாமல் உள்ள அகவிலைப்படி நிலுவை தொகையை செலுத்த கோரிக்கை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டம்:

சென்னை பல்லவன் இல்லம் முன்பு நேற்று தமிழக அரசின் போக்குவரத்துக்கு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 2,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போக்குவரத்துக்கு திரையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 76 மாதங்களாக அகவிலைப்படி பாக்கித் தொகை செலுத்தப்படாமல் உள்ளது. இதனை அரசு உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் மேலும் பல கோரிக்கைகளையும் வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

தாயகம் திரும்பும் 5 தமிழர்கள் உட்பட 470 இந்தியர்கள் – ஏர் இந்தியா விமானம் ஏற்பாடு!

இது தவிர தமிழகம் முழுவதும் நேற்று போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கே.கர்‌ஷன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் கிருஷ்ணன் போராட்டத்தின் போது பேசியுள்ளார். அவர், 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் பல சிக்கல்கள் உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப் படி உயர்வு வழங்காமல் முடக்கப்பட்டுள்ளது. 76 மாதங்களாக வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய பயன்பாடுகள்!

அகவிலைப்படி நிலுவைகள், மருத்துவப்படி 100 ரூபாயை, 300 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 7,850 ரூபாய் அமல்படுத்த வேண்டும். ராணுவ குடும்ப ஓய்வூதியத்துடன் கழக குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி 50,000 ரூபாய் வழங்க வேண்டும். வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி மாதம் 1 ஆம் தேதி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். 1.4.2003 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!