பெண் சக்தி விருதுகள் 2021 – பிப்ரவரி 6 ஆம் தேதி கடைசி நாள்!!

0
பெண் சக்தி விருதுகள் 2021 - பிப்ரவரி 6 ஆம் தேதி கடைசி நாள்!!
பெண் சக்தி விருதுகள் 2021 - பிப்ரவரி 6 ஆம் தேதி கடைசி நாள்!!
பெண் சக்தி விருதுகள் 2021 – பிப்ரவரி 6 ஆம் தேதி கடைசி நாள்!!

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், சிறப்பான பணி செய்த பெண்களை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பெண் சக்தி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு இந்த விருதை பெற விண்ணப்பிக்க கடைசி நாளை பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சக்தி விருதுகள்:

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பெண் சக்தி விருதுகள் வழங்க இந்த ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 1 முதல 8ம் வகுப்பு வரை 50% பாடத்திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

பெண்களின் முன்னேற்றத்திற்கு ஊக்குவித்தல், கிராமப்புற பெண்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுத்தல், அறிவியல், தொழிநுட்பம், விளையாட்டு, கலை, கலாச்சாரம் போன்ற துறைகளில் பெண்களை ஊக்குவித்தல், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்க்கை, பெண்களுக்கு வழங்கப்படும் மரியாதை போன்ற குறிப்பிட்ட துறைகளில் பெண்கள் நலனுக்காக பாடுபடும் தனி நபர், குழுக்கள் அல்லது நிறுவனம் போன்றவற்றிற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

NIFT தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்வு!!

இந்த விருதினை பெற விதிமுறைகளின் கீழ் 25 வயதிற்கு மேற்பட்ட தனிநபர் அல்லது சம்மந்தப்பட்ட துறைகளை சார்ந்த நிறுவனங்களில் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருது பெற தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். இதுகுறித்த விவரங்கள் அறிய http://narishaktipuraskar.wcd.gov.in/ என்ற இணையதளத்தை காணலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!