WhatsApp பண பரிமாற்ற சேவையில் புதிய அம்சம் – பேமண்ட் பேக்ரவுண்ட் அறிமுகம்!

0
WhatsApp பண பரிமாற்ற சேவையில் புதிய அம்சம் - பேமண்ட் பேக்ரவுண்ட் அறிமுகம்!
WhatsApp பண பரிமாற்ற சேவையில் புதிய அம்சம் - பேமண்ட் பேக்ரவுண்ட் அறிமுகம்!
WhatsApp பண பரிமாற்ற சேவையில் புதிய அம்சம் – பேமண்ட் பேக்ரவுண்ட் அறிமுகம்!

வாட்ஸ் அப் செயலி மூலம் பணம் செலுத்தும் சேவையில் ஒரு புதிய அம்சம் இந்திய பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி பணம் செலுத்தும் நோக்கத்துக்கான பின்னணியையும் (Payments Backgrounds) இனி பயனர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.

பேமண்ட் பேக்ரவுண்ட்

உலகின் முன்னணி தகவல் தொடர்பு சாதனமான வாட்ஸ் அப் செயலியில் பண பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதி பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பணம் அனுப்பும் வாடிக்கையாளர்கள் அதற்கான காரணத்தை தேர்வு செய்து கொள்ளும் வகையில் தற்போது Payments Backgrounds என்ற பண பரிமாற்ற அனுபவத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் வாட்ஸ் அப் பயனர்களுக்கு பயனாக்க கட்டண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் – ஆணையம் அறிவிப்பு!

வாட்ஸ் அப் பேமெண்ட்களைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு நீங்கள் பணம் அனுப்பும்போது பொருத்தமான பின்னணியைத் தேர்ந்தெடுக்க இது உதவுகிறது. இந்த சேவைகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பதிப்பின் இந்திய பயனர்களுக்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பணத்தை பரிமாறிக்கொள்ளும்போது, அதன் நோக்கத்தை சேர்ப்பதே பேமெண்ட்ஸ் பின்னணி அம்சத்தின் முக்கிய நோக்கம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அம்சத்தில் வாட்ஸ்அப் ஏழு பின்னணி பட்டியலைச் சேர்த்துள்ளது. அதன் மூலம் பிறந்தநாள், பயணம் உள்ளிட்ட காரணங்களுக்காக ஒருவருக்கு பணம் அனுப்பும் போது அதற்கான பின்னணியை தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் வாட்ஸ் அப்பில் கட்டண பின்னணியை தேர்வு செய்ய, முதலில் Send Payment திரையில் உள்ள பின்னணி ஐகானைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது Send Payment என்ற ஐகானைத் தட்டினால், பணம் அனுப்பும் நோக்கத்தை அதாவது பேமெண்ட் தீம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க கூடிய பட்டியல் காட்டப்படும்.

TN Job “FB  Group” Join Now

உங்கள் கட்டணத்திற்கான காரணத்தை விவரிக்க பின்னணியுடன் ஒரு குறிப்பையும் சேர்த்து கொள்ளலாம். இந்த செயல்பாடுகள் முடிந்தவுடன், பெறுநரால் நீங்கள் செலுத்திய தொகையுடன் பின்னணியையும் பார்க்க முடியும். முன்னதாக பல மாத சோதனைக்குப் பிறகு வாட்ஸ் அப் தனது கட்டணச் சேவையை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. இது முதலில் ஐந்து வங்கி சேவைகளுடன் மட்டுமே தொடங்கியது. இருப்பினும் இவை ஆக்சிஸ் வங்கி, HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் SBI என நான்கு வங்கிகளாக குறைந்தது. தற்போது, UPI அடிப்படையிலான வாட்ஸ்அப் பேமெண்ட்கள் 227 க்கும் மேற்பட்ட வங்கி பரிவர்த்தனைகளை இயக்குகிறது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!