Pawan Hans Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Pawan Hans Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - செப்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
Pawan Hans Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - செப்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
Pawan Hans Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் சேவை வழங்குநர் நிறுவனமான பவன் ஹான்ஸ் லிமிடெட், பயிற்சி தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 வரை வரவேற்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு:

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வந்துகொண்டிருக்கக் கூடிய இந்த சூழலில் மக்கள் தங்கள் அன்றாட தொழில்களில் ஈடுபட துவங்கியுள்ளனர். அந்த வகையில் புதிய நிதியாண்டிலும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக TCS, விப்ரோ, இன்போசிஸ் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தனது அலுவலங்களில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது.

JEE மெயின்ஸ் 2021 விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்!

இந்நிலையில் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் முன்னணி ஹெலிகாப்டர் சேவை வழங்குநர் நிறுவனமான பவன் ஹான்ஸ் லிமிடெட் தனது நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. அதாவது பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணியிடத்தில் மொத்தம் 28 இடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் B-1 (A & C) -18 இடங்களும், பி -2 ஏவியோனிக்ஸ் பணியில் 10 இடங்களும் காலியாக இருக்கிறது.

இப்பணிக்கு, மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் ஆகியவற்றில் டிப்ளோமா பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆக இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை pawanhans.co.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

உங்களது ஆதார் எண் மறந்து விட்டதா? கண்டறிவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

பின்னர் அந்த படிவத்தை நிரப்பி, அதனை துணை பொது மேலாளர் (HR & A), பவன் ஹான்ஸ் லிமிடெட், ஜுஹு ஏரோட்ரோம், SV சாலை, விலே பார்லே, (மேற்கு), மும்பை – 400 056 என்ற தபால் முகவரிக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .16,500 ஊதியமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!