TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, பாட திட்டம், கட் ஆப் விவரங்கள்!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - கல்வித்தகுதி, பாட திட்டம், கட் ஆப் விவரங்கள்!
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - கல்வித்தகுதி, பாட திட்டம், கட் ஆப் விவரங்கள்!
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, பாட திட்டம், கட் ஆப் விவரங்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 மற்றும் VAO தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த தேர்வில் கலந்து கொள்ள தேவையான கல்வித்தகுதி, பாட திட்டம் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

குரூப் 4 தேர்வு

தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 முதல் குரூப் 4 மற்றும் VAO உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்குமான போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இப்போது தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போட்டித்தேர்வுகளை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

2016 TNPSC குரூப் 4 VAO தேர்வு முறைகேடு – உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி!

அதுவும் இந்த ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் 2 மாதங்களே மீதமிருக்கும் நிலையில் தேர்வு கால அட்டவணையின் படி இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய குரூப் 4 மற்றும் VAO தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான கல்வித் தகுதிகள், பாடத்திட்டம், கட் ஆப் மதிப்பெண்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

குரூப் 4 தேர்வு:

TNPSC நடத்தும் தேர்வுகளில் எளிமையான தேர்வு என்றால் அது குரூப் 4 மற்றும் VAO தேர்வு ஆகும். இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்பதால் இந்த தேர்வுக்கு பல ஆயிரக்கணக்கானோர் போட்டியிடுவது வழக்கம். குறிப்பாக இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே வேலை கிடைக்கும் வாய்ப்பு கிட்டும்.

பதவிகள்:
  • இளநிலை உதவியாளர் (Junior Assistant)
  • தட்டச்சர் (Typist)
  • சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
  • கிராம நிர்வாக அலுவலர் (Village Adminisrtative Officer)
  • வரித் தண்டலர் (Bill Collector)
  • நில அளவர் (Field Surveyor)
  • வரைவாளர் (Draftsman)
கல்வித் தகுதி:
  • கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே போதுமானதாகும்.
  • இதில் தட்டச்சர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி அவசியம்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

  • சுருக்கெழுத்தர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப பயிலகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி அவசியம்.
  • இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும்.
வயதுத் தகுதி:
  • VAO பணிக்கு பொதுபிரிவில் 21 – 30 வரையும் பிற வகுப்பிற்கு 40 வயது வரையும் தளர்வுகள் அளிக்கப்படும்.
  • இளநிலை உதவியாளர் பணிக்கு பொதுபிரிவில் 18 – 30 வரையும் பிற வகுப்பிற்கு 35 வயது வரையும் தளர்வுகள் அளிக்கப்படும்.
  • இவற்றில் மேல்நிலை, பட்டப்படிப்பு, முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை:
  • இது எழுத்துத் தேர்வை மட்டுமே அடிப்படையாக கொண்டது.
  • எழுத்துத் தேர்வில் கேட்கப்படும் 200 வினாக்களுக்கு 1.5 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
  • வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும்.
பாடத்திட்டம்:
  • மொழிப் பாடப்பிரிவில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் கேட்கப்படும்.
  • இப்போது தமிழ் பாடத் தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுக்கும்
  • தேர்வர்களுக்கு தான் அடுத்த வினாத்தாள்கள் திருத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தொடர்ந்து பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும்.
  • இதில் 75 பொது அறிவு வினாக்களும் , 25 திறனறி தேர்வுகளும் அடங்கும்.
பாடங்கள்:
  • TNPSC தேர்வுக்கான வினாக்கள் பெரும்பாலும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்து கேட்கப்படும்.
  • ஒரு சில நேரங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.
கட் ஆப் மதிப்பெண்கள்:
  • இந்த தேர்வில் கேட்கப்படும் மொத்தம் 300 கேள்விகளில் 90 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானதாகும்.
  • ஆனால் கட் ஆப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.
  • ஏனென்றால் கட் ஆப் மதிப்பெண்களை அதிகம் எடுத்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
  • அதாவது BC பிரிவில் 162, MBC பிரிவில் 162, BCM பிரிவில் 154, SC பிரிவில் 160, SCA பிரிவில் 155, ST பிரிவில் 156 வினாக்களுக்கு சரியாக விடை எழுதியவர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாக தெரிகிறது.
  • அதனால் தேர்வர்களுக்கு ஏற்ப போட்டித் தேர்வுகளில் அதிகளவு மதிப்பெண்கள் எடுப்பது அவசியம் ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!