பாஸ்போர்ட் சேவை மையம் நிறுத்தம்..!

0
பாஸ்போர்ட் சேவை மையம் நிறுத்தம்..!
பாஸ்போர்ட் சேவை மையம் நிறுத்தம்..!

பாஸ்போர்ட் சேவை மையம் நிறுத்தம்..!

கொரோன தாக்குதலின் காரணமாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் செயல்படும் 9 மாவட்ட பாஸ்போர்ட் சேவை மையங்கள், தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூடப்படும் என பாஸ்போர்ட் அலுவலர் த.அருண்பிரசாத் அறிவித்துள்ளார்.

இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து பாஸ்போர்ட்களின் எண்ணிக்கை நேற்று முதல் பாதியாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் அவசரத் தேவை உள்ளவர்கள் மட்டுமே பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்,இதில் காய்ச்சல், தலைவலி, சளி போன்ற வைரஸ் தொற்று உள்ளவர்கள் பாஸ்போர்ட் சேவை மையம் மற்றும் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும் என அறிவித்துள்ளார்.

மேலும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சம்மந்தப்பட்ட விசாரணைகளின் நடைமுறை 2 வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூடப்படுவதாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் செயல்படும் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்திலுள்ள தபால் சேவை மையங்கள், மதுரை, நெல்லையிலுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் வருக்கின்ற மார்ச் 31-ம் தேதி வரை இயங்காது.

முன்பே பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு வர காத்திருக்கும் நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த தேதியை மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!