ஜூலை 24 வரை பகுதிநேர ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – திரிபுரா அரசு அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று நிலைமையை மறுபரிசீலனை செய்த பின்னர், ஜூலை 24 ஆம் தேதி வரை திரிபுரா மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் வார நாட்களில் பகுதி ஊரடங்கு உத்தரவுகளை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்
திரிபுரா மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் சற்று அதிகரித்துள்ளதால் மாநிலம் முழுவதுமான கொரோனா பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வார இறுதி ஊரடங்கு உத்தரவானது சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு துவங்கி திங்கள் கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும். வார நாட்களை பொருத்தளவு பகல் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவானது ஜூலை 19 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் ஜூலை 24 அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முதல்வர் கோரிக்கை!
இந்த ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களின் இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வார இறுதி முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுதன் கீழ் அவசரகால சேவைகளைத் தவிர மற்ற அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திரிபுரா மாநில வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘திரிபுராவில் ஜூலை 17 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் ஜூலை 19 ஆம் தேதி காலை 6 மணி வரை முழுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இது தவிர, அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதி, ரனிர்பஜர் மாநகராட்சி, ஜிரானியா நகர் பஞ்சாயத்து, கைலாஷாஹர் நகராட்சி மன்றம், தர்மநகர் நகராட்சி மன்றம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஜூலை 19 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் ஜூலை 23 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் கீழ், மருந்து, பழம், காய்கறி, பால், மீன், இறைச்சி, முட்டை, கால்நடை தீவனம் மற்றும் ரேஷன் கடைகள் அனைத்தும் வார இறுதி நாட்களில் திறக்கப்படும். இருப்பினும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் குறைந்தது 36 சதுர அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.