தமிழக அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் முறைகேடு – பணம் வசூல்! பெற்றோர்கள் அதிருப்தி!

0
தமிழக அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் முறைகேடு - பணம் வசூல்! பெற்றோர்கள் அதிருப்தி!
தமிழக அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் முறைகேடு - பணம் வசூல்! பெற்றோர்கள் அதிருப்தி!
தமிழக அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் முறைகேடு – பணம் வசூல்! பெற்றோர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் சேர்க்கையில் முறைகேடு:

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகளின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் எடுக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் பொருளாதார இழப்பு காரணமாக பெற்றோர்கள் பலரும் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் இருந்து இடைநீக்கம் செய்து அரசுப்பள்ளிகளில் சேர்க்க தொடங்கினர். மேலும் தமிழக அரசும் அரசு பள்ளி மாணவர்களின் திறன்களை வளர்க்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது. இதனால் கடந்த மற்றும் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கிடுகிடுவென அதிகரித்தது.

TN Job “FB  Group” Join Now

மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்தால் சிறப்பு ஊக்கத்தொகை போன்ற திட்டங்களையும் சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் செயல்படுத்த தொடங்கினர். இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டம் 35வது வார்டில் உள்ள அரசுப்பள்ளியில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1000 வரை வசூலிக்கப்படுவதாக பெற்றோர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து கேள்வி எழுப்புகையில், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் வசூலிப்பதாக காரணம் கூறி உள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இரண்டாம் முறை காதலில் விழுந்த சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா – ரசிகர்கள் ஷாக்!

அதுமட்டுமின்றி பணம் தர மறுத்தால் மாணவர் சேர்க்கையில் தாமதம் / அலைக்கழிப்பு உள்ளிட்டவை ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அரசு பள்ளிகளின் தொடக்க வகுப்புகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களும் இதற்கு காரணமாக உள்ளது. எனவே அரசு தலையிட்டு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!