தமிழக பேக்கரி, உணவகங்களில் எச்சிலை தொடாமல் பார்சல் – நீதிமன்றம் அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பேக்கிரி மற்றும் உணவகங்களில் பார்சல் செய்யும் போது எச்சில் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மே 10 முதல் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் மே 24 முதல் எந்தவித தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் நலிந்த கலைஞர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை – முதல்வர் துவக்கி வைப்பு!
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 7 வரை அமலில் இருந்தது. இந்நிலையில் அரசு சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் மளிகை, காய்கறி கடைகள், பழக்கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கபட்டன. மேலும் உணவகங்கள், பேக்கரி கடைகளில் பார்சல் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு பேக்கரி கடைகள், உணவகங்களில் பார்சல் செய்யும் போது எச்சில் பயன்படுத்த கூடாது என அறிக்கை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.