தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பார்சல் சேவை – குவியும் வரவேற்பு!

0
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பார்சல் சேவை - குவியும் வரவேற்பு!
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பார்சல் சேவை - குவியும் வரவேற்பு!
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பார்சல் சேவை – குவியும் வரவேற்பு!

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி தமிழக மக்கள் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பொருட்களை அனுப்பலாம். அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

பார்சல் வசதி:

தமிழகத்தில் 1,110 அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோர் உணவு பொருட்கள் மற்றும் அவர்கள் பகுதியில் செய்ய கூடிய அனைத்து பொருட்களையும் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி முதல் இந்த பார்சல் சேவையை அரசு துவங்கி உள்ளது.

Post Office இல் குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ!

இதனால் அரசுக்கு தொடக்கத்தில் தினமும் ரூ.10,000 வருவாய் கிடைத்த நிலையில் தற்போது ரூ.15,000 ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து மீன், தின்பண்டங்கள் அதிகளவில் பார்சலாக வருகிறது. அதே போல சேலத்தில் இருந்து பன்னீர் போன்ற பொருட்களும் அதிக அளவில் பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. தினமும் 30 பார்சல்கள் அரசு பஸ்களில் செல்கின்றன. மேலும் பொதுமக்கள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே அரசு போக்குவரத்து கழக செயலி மூலம் பார்சல் அனுப்ப முன்பதிவு செய்யலாம்.

பார்சலின் எடையை குறிப்பிட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதற்கு யுபிஐ முறையில் கட்டணம் செலுத்தும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பேருந்துகளில் கூரியர் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்தி கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!