தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காகிதம் இல்லா காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காகிதம் இல்லா காலாண்டு தேர்வு - ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காகிதம் இல்லா காலாண்டு தேர்வு - ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காகிதம் இல்லா காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கால மாற்றத்தை பொறுத்து பல்வேறு மாற்றங்களை கல்வித்துறை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் காகிதம் இல்லா காலாண்டு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கும் நிலையில் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காகிதம் இல்லா காலாண்டு தேர்வு

வளர்ந்து வரும் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார் போல கல்வித்துறையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவுகள் இதுவரை குறிப்பேடுகளில் இருந்த நிலையில் தற்போது பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத நிலையில் மொபைல் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் அது சரியாக இல்லை எனவும், மொபைல் போன் மூலம் படிப்பதால் மாணவர்கள் மத்தியில் கவன சிதறல் இருப்பதாக புகார் வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கம் போல பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் காலாண்டு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன் படி தற்போது காகிதம் இல்லா காலாண்டு தேர்வு நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக ஆசிரியர்கள் பாடங்கள் மட்டுமே நடத்தி வந்த நிலையில் தற்போது மாணவர்களின் உடல் நிலை, உணவு முறை, குடும்ப விவரம் என பல கேள்விகள் கேட்கப்படுவதால் ஆசிரியர்கள் எந்த நேரமும் மொபைல் கையுமாக இருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.

தமிழகத்தில் நாளை (22-09-2022) மின்தடை அறிவிப்பு – முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!

Exams Daily Mobile App Download

அதில் கல்வித்துறையின் காலாண்டு தேர்வு குறித்த இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில் கல்வித்துறையின் மாற்றங்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறோம். ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கூறும் கல்வித்துறை மொபைல் மூலம் காலாண்டு தேர்வு நடத்த சொல்வது சரியாக வராது. தற்போது 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்வழியாக காலாண்டு தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்போனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு அவர்கள் கூறும் பதில்கள் அடிப்படையில் மதிப்பீடுகளை செல்போனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனால் மாணவர்களின் எழுத்து திறமை குறைந்துவிடும். ஆரம்ப கல்வியில் சரியாக படிப்பது தான் பின்னர் உதவியாக இருக்கும். ஆரம்பத்தில் வாய்வழி தேர்வு நடத்தினால் மாணவர்களின் எழுத்து மற்றும் சிந்தனைத் திறன் பாதிக்கப்படும். எனவே கல்வித்துறை இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here