பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் நெருடலில் தவிக்கும் முல்லை – வரப்போகும் ட்விஸ்ட்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீண்டும் நெருடலில் தவிக்கும் முல்லை - வரப்போகும் ட்விஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீண்டும் நெருடலில் தவிக்கும் முல்லை - வரப்போகும் ட்விஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் நெருடலில் தவிக்கும் முல்லை – வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக உள்ளது. கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை சொல்லும் இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கதிர் – முல்லை வீட்டை விட்டு சென்ற பிறகு சீரியல் தற்போது கொஞ்சம் டல்லாக சென்று கொண்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்றைய எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பொறுத்தவரையில் 4 அண்ணன் – தம்பிகளை சுற்றி தான் மொத்த கதையுமே. இத்தனை நாட்களாக இந்த குடும்பம் எவ்வளவோ பிரச்சனையை சந்தித்து இருக்கிறது. இந்த குடும்பத்தை பிரிக்க இதுவரை பலரும் முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் இதுவரை அண்ணன் – தம்பிகளின் ஒற்றுமை பிரிந்தது இல்லை. ஆனால் மீனா அப்பாவால் வந்த சண்டையால் முல்லையும் கதிரும் வீட்டை விட்டு சென்றுவிட்டனர். இவர்கள் சென்ற வருத்தத்தில் அண்ணன் மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு 2 ஆபரேஷன் செய்யப்பட்டு வீட்டில் ஓய்வில் உள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் சூப்பர் மார்கெட்டை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் ஜீவா மட்டும் பார்த்து கொள்கிறார். இதனால் என்ன செய்வது என்று யோசித்து தனமும் சில தினங்களாக கடைக்கு சென்று கடையை கவனித்து வருகிறார். தனம் வீட்டில் இல்லாததால் மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சமைக்க போட்டி போட்டுக் கொள்கின்றனர். மற்றொரு பக்கம் கதிர் தனி குடித்தனம் சென்று உள்ளார். மேலும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறேன் என்று முல்லையிடம் சொல்லிவிட்டு கதிர் ஹோட்டலில் வேலை செய்கிறார்.

TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

மேலும் முல்லை மருத்துவ செலவுக்கு வாங்கிய அந்த 5 லட்சம் ரூபாயை எப்படியாவது திருப்பி கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் கடுமையாக உழைக்கிறார் கதிர். இதற்கிடையில் முல்லை தனியாக வீட்டில் இருப்பதால், தனிமையை உணர்கிறார். அங்கு அக்கா, மாமா குழந்தைகள் என குடும்பமாக ஒன்றாக இருந்தோம் இப்போ இப்படி தனியாயிட்டோமே என்று வருத்தப்படுகிறார். இதையடுத்து கதிர் அந்த 5 லட்ச பணத்தை சம்பாதித்து அண்ணனிடம் கொடுத்து விட்டு மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்குள் செல்வாரா? இல்லை தனி குடித்தனமாவே இருந்து விடுவார்களா? என்ற பல கேள்விகளை ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here