‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருக்கு ‘வாரிசு’ பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட அவமானம் – வைரலாகும் பதிவு!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகருக்கு 'வாரிசு' பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட அவமானம் - வைரலாகும் பதிவு!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகருக்கு 'வாரிசு' பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட அவமானம் - வைரலாகும் பதிவு!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருக்கு ‘வாரிசு’ பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட அவமானம் – வைரலாகும் பதிவு!

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவிற்கு அப்பாவாக நடித்து வரும் ஜனார்த்தனன் வாரிசு ஷூட்டில் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

‘வாரிசு’ பட ஷூட்டிங்

தளபதி விஜய்யின் 66 ஆவது திரைப்படமான வாரிசு திரைப்படம் இயங்குனர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. ஒரு குடும்ப எமோஷனல் படமாக உருவாகிவரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. தற்போது, மூன்றாம் கட்ட படப்பிடிப்பாக விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

தமிழகத்தில் கஞ்சா, போதை பொருள் கடத்துபவர்களின் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை!

மேலும், வாரிசு திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷாம், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய பிரபலங்களும் நடித்து வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையதளத்தில் கசிந்தன. மேலும், வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலுக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=yVteBl1kg4o

இந்நிலையில், விஜய்யின் வாரிசு பட ஷூட்டில் தனக்கு அவமானம் ஏற்பட்டதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவிற்கு அப்பாவாக நடித்து வரும் ரவிச்சந்திரன் பேட்டியளித்துள்ளார். அதாவது, இயக்குனர் எனக்கு கால் செய்து சில போட்டோக்களை அனுப்ப சொன்னார்கள். போட்டோவை அனுப்பியதும் நேரில் வர சொன்னார்கள். நேரில் என்னை பார்த்த பிறகு நாளை காலை 6 மணிக்கு ஷூட் இருக்கிறது வந்துவிடுங்கள் என கூறினார்கள். பெரிய நடிகரின் திரைப்படத்தில் நடித்தால் அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரும் என நம்பி பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனரிடமும் அனுமதி பெற்று ஷூட்டிற்கு சென்றேன். ஆனால், அங்கு சென்றதும் இந்த கதாபாத்திரத்திற்கு பாவமாக இருக்கிற ஒருத்தர் தான் வேண்டும் என சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள். எனக்கு மிகவும் அவமானமாகிவிட்டது என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!