கோபியின் நாடகத்தை பற்றி ராதிகாவிடம் போட்டுக் கொடுக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – அடுத்தகட்ட திருப்பங்கள்!

0

கோபியின் நாடகத்தை பற்றி ராதிகாவிடம் போட்டுக் கொடுக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – அடுத்தகட்ட திருப்பங்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இரண்டும் சேர்ந்து மெகா சங்கமம் நடக்க இருக்கும் நிலையில் அதில் பல திருப்பங்கள் நடக்க இருப்பது போல் கதையில் மாற்றங்கள் வர இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த காட்சிகளை எதிர்பார்த்து வருகின்றனர்.

மெகா சங்கமம்:

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் சுயரூபம் அனைவர்க்கும் தெரிய வரும் அதிரடி காட்சிகள் நெருங்கி வருவது போல் தான் கதை சமீப காலமாக சென்று வருகின்றது. ஆனால் யார் மூலம் இந்த உண்மைகள் வெளியாகும் என்று ஒரு எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது. இந்தனை முறைகளும் கோபி ஏதாவது தில்லுமுல்லு வேலைகளை செய்து தப்பித்து வந்தார். ஆனால் இந்த முறை கோபி கையும் களவுமாக சிக்க இருக்கிறார். தாத்தாவின் பிறந்த நாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரையும் பாக்கியா அழைத்து இருக்கிறார்.

மே 8 மாலை உருவாகும் அசானி புயல் – 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

முல்லையும் குழந்தை விஷயத்தில் மிகவும் வருத்தமாக இருப்பதால் வெளியில் சென்று வந்தால் சற்று ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து தனமும் பாக்கியா வீட்டிற்கு சென்று வரலாம் என்று நினைக்கிறார். இந்த எபிசோடுகள் மீண்டும் ஒரு மெகா சங்கமமாக வர உள்ளது. கடந்த முறை மெகா சங்கமம் காட்சிகள் அதிக வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றிருந்தது. அதே போல் இந்த முறையும் பல விறுவிறுப்பான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

கோபியில் அறையில் தான் மூர்த்தி மற்றும் கண்ணன் இருவரும் தூங்குவதற்கு செல்கின்றனர். ஆனால் இரவு முழுவதும் ராதிகாவிடம் இருந்து கால் மற்றும் மெசேஜ் வந்து கொண்டிருப்பதை கண்ணன் கவனித்து விடுகிறார். கோபி ஏதோ தவறு செய்கிறார் என்று புரிந்து கொள்கிறார். அதேபோல் பிறந்த நாள் விழாவிற்கு ராதிகா வரும் போது கோபி அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். இதை எல்லாம் வைத்து ராதிகாவிற்கும் கோபிக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாக கண்ணன் கணித்து விடுகிறார். இதனால் ராதிகாவிடம் இதை பற்றி சொல்வது போல் காட்சிகள் வர உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here